tamilnadu

img

துணை ஜனாதிபதி தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பில் பொது வேட்பாளர்

துணை ஜனாதிபதி தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பில் பொது வேட்பாளர்

உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி பி. சுதர்ஷன் ரெட்டி போட்டி!

புதுதில்லி, ஆக. 19 - குடியரசுத் துணைத் தலைவர் தேர்த லில், இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் உச்சநீதிமன்ற முன்னாள் நீதி பதி பி. சுதர்ஷன் ரெட்டி (79), பொது வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை, இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்களின் முன்னிலையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே வெளியிட்டார். ஆம் ஆத்மி கட்சியும் நீதிபதி பி. சுதர்ஷன் ரெட்டி க்கு தமது ஆதரவை வழங்கியுள்ளது. தில்லியில் கூடி ஆலோசித்த இந்தியா கூட்டணி தலைவர்கள்  குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் தொடர்பான, இந்தியா கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம், செவ்வாய்க்கிழமையன்று காலை நடை பெற்றது. தேசியவாத காங்கிரஸ் தலை வர் சரத் பவார், சிவசேனா (உத்தவ்) கட்சித் தலைவர் சஞ்சய் ராவத், காங்கிரஸ் பொதுச்செயலாளர்கள் கே.சி. வேணுகோபால், ஜெய்ராம் ரமேஷ், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.  டெரிக் ஓ பிரையன், திமுக துணைப் பொதுச்செயலாளர்கள் கனிமொழி, திருச்சி சிவா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜான் பிரிட்டாஸ், சமாஜ்வாதி கட்சி எம்.பி. தர்மேந்திர யாதவ், காங்கிரஸ் எம்.பி. பிரமோத் திவாரி, சிவசேனா (உத்தவ்) எம்.பி. அரவிந்த் சாவந்த் உள்ளிட்ட தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர். பி. சுதர்ஷன் ரெட்டி ஒருமனதாக தேர்வு இந்தக் கூட்டத்தின் முடிவிலேயே, உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி பி.  சுதர்ஷன் ரெட்டியை, குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கான பொது வேட்பாளராக இந்தியா கூட்டணி கட்சிகள் ஒருமனதாக அறிவித்தன. வேட்பாளர் அறிவிப்பை வெளி யிட்டுப் பேசிய அகில இந்திய காங்கி ரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, “நீதிபதி சுதர்ஷன் ரெட்டி இந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற மற்றும் முற்போக்கான நீதிபதிகளில் ஒருவர்” என்றும், “சட்டத்துறையில் நெடுங்காலம் திறம்பட பயணித்த அனு பவத்தைக் கொண்ட அவர், ஆந்திர பிரதேச உயர் நீதிமன்ற நீதிபதி, கவு காத்தி (அசாம்) உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி; உச்ச நீதிமன்ற நீதிபதி ஆகிய பொறுப்புகளை வகித்த வர். சமூக, பொருளாதார, அரசியல் நீதிக்காகத் தொடர்ந்து போராடும் துணிச்சல் மிக்கவர்” என்றும் தெரிவித்தார். ஜனநாயக அமைப்புக்களை பாதுகாக்கவே பொது வேட்பாளர் மேலும், “குடியரசு துணைத் தலை வர் தேர்தலானது ஒரு சித்தாந்த போராட்டம்” என்று கூறிய மல்லி கார்ஜூன கார்கே, “அந்த அடிப்படை யிலேயே, இந்தியா கூட்டணி கட்சிகள், பி. சுதர்ஷன் ரெட்டியைக் குடியரசு துணைத் தலைவர் பதவிக்கான ஒரு மித்த வேட்பாளராகத் தெரிவு செய்துள் ளோம்,” என்றும்; “அவர், நமது நாட்டின் விடுதலை இயக்கத்தை வடிவமைத்த மாண்புகளை, எவற்றின் மீது நமது நாட்டின் அரசியலமைப்பும், ஜன நாயகமும் நங்கூரமிட்டு நிலை நிறுத்தப்பட்டு உள்ளதோ, அந்த மாண்பு களை முழுமையாக அவர் பிரதி பலிப்பார்” என்றார். நீதிபதி பி. சுதர்ஷன் ரெட்டி, ஆகஸ்ட் 21 அன்று தமது வேட்புமனுவை தாக்கல் செய்வார் என்றும் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்தார். மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ. பேபி உள்ளிட்ட தலைவர்கள் உடனிருந்தனர். இந்தப் பின்னணியிலேயே, உச்ச  நீதிமன்ற முன்னாள் நீதிபதி பி. சுதர்ஷன் ரெட்டியை தங்கள் தரப்பு பொதுவேட்பாளராக இந்தியா கூட்டணி கட்சிகள் அறிவித்துள்ளன. குடியரசுத் துணைத்தலைவர் தேர்தல் செப்டம்பர் 9 அன்று நடைபெறுகிறது.

சுதர்ஷன் ரெட்டி வெற்றிக்கு சிபிஎம் பணியாற்றும் அரசியல் தலைமைக்குழு அறிக்கை

குடியரசுத் துணைத் தலைவருக்கான தேர்தலில் ‘இந்தியா’ கூட்டணி சார்பில் போட்டியிடும் பொது வேட்பாளர் நீதிபதி பி. சுதர்ஷன் ரெட்டிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழுக் கூட்டம் ஆகஸ்ட் 18 அன்று புதுதில்லியில் உள்ள மத்தியக்குழு அலுவலகத்தில் நடைபெற்றது.  அதனைத் தொடர்ந்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “தன்கரின் திடீர் ராஜினாமாவால் அவசியமாகியுள்ள குடியரசு துணைத் தலைவர் பதவிக்காக நடை பெறவிருக்கும் தேர்தல் குறித்து அரசியல் தலைமைக்குழு விவாதித்தது. அதில், இந்தியா கூட்டணி சார்பில் நிறுத்தப்பட்டுள்ள பொது வேட்பாளர் நீதிபதி பி. சுதர்ஷன் ரெட்டியின் வெற்றிக்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இதர எதிர்க்கட்சிகளுடன் இணைந்து செயல்படும் என முடிவெடுக்கப்பட்டு உள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.