கோவையில் முதற்கட்ட தீக்கதிர் சந்தா 700 ஒப்படைப்பு
கோவை மாவட்டத்தில் தீக்கதிர் நாளிதழ் சந்தா சேர்ப்பு இயக்கம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. முதற்கட்ட சந்தா வழங்கும் நிகழ்ச்சி சிபிஎம் மாவட்டக்குழு அலுவலகத்தில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.இராமமூர்த்தி தலைமையில் சனிக்கிழமையன்று நடைபெற்றது. இதில் 553 ஓராண்டுச் சந்தா, 147 ஆறு மாதச் சந்தா என மொத்தம் 700 சந்தாக்களுக்கான தொகை ரூ.14 லட்சத்து 31 ஆயிரம், மாநில செயற்குழு உறுப்பினர் க.கனகராஜிடம் வழங்கப்பட்டது. இதில், மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை மாவட்டச்செயலாளர் சி.பத்மநாபன், மாநிலக்குழு உறுப்பினர் அ.ராதிகா, கோவை பதிப்பு பொதுமேலாளர் எஸ்.ஏ.மாணிக்கம் மற்றும் மாவட்ட செயற்குழு, மாவட்டக்குழு உறுப்பினர்கள் உள்பட திரளானோர் பங்கேற்றனர்.