tamilnadu

img

அனைத்து கேட்டுகளிலும் பணியாற்றக்கூடிய தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்

அனைத்து கேட்டுகளிலும் பணியாற்றக்கூடிய தொழிலாளர்களின் பாதுகாப்பை  உறுதி செய்ய வேண்டும்

திருச்சிராப்பள்ளி, செப். 22-  டி.ஆர்.இ.யு, திருச்சி கோட்ட மாநாடு (ஏஜிஎம்)சனிக்கிழமை பொன்மலையில் நடைபெற்றது. மாநாட்டிற்கு டி.ஆர்.இ.யு கோட்ட தலைவர் சிவக்குமார் தலைமை வகித்தார். துணை பொதுச் செயலாளர் ராஜா முன்னிலை வகித்தார். மாநாட்டு கொடியை டி.ஆர்.பி.யு மாதவன் ஏற்றினார். அஞ்சலி தீர்மானத்தை கோட்ட துணைத் தலைவர் அருண்ராஜ் வாசித்தார். கோட்ட உதவிச் செயலாளர் பலராம் வரவேற்றார். துணை பொதுச்செயலாளர் சரவணன் துவக்க உரையாற்றினார். சி.ஐ.டி.யு மாநகர் மாவட்டச் செயலாளர் ரெங்கராஜன், சங்க துணை பொதுச் செயலாளர் சந்தான செல்வம், கோட்டத் தலைவர் லெனின் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். செயலாளர் அறிக்கையை கோட்டச் செயலாளர் கரிகாலன் வாசித்தார். வரவு - செலவு அறிக்கையை கோட்டப் பொருளாளர் லெட்சுமிபதி சமர்ப்பித்தார். மண்டல துணைத் தலைவர் ஜானகிராமன் சிறப்புரை ஆற்றினார். மாநாட்டில், தென்னக ரயில்வே பொது மேலாளர் செயல்திட்டம் 2025 இன் படி அனைத்து இன்ஜினியரிங் கேட்டுகளிலும் கேட் கிளாசிபிகேஷன் செய்து 8 மணி நேர வேலை நேரத்தை உறுதிப்படுத்த வேண்டும். என்.ஐ கேட்டுகளில் நியமனம் செய்யும் போது முறையான சீனியாரிட்டியை பின்பற்ற வேண்டும். அனைத்து கேட்டுகளிலும் பணியாற்றக்கூடிய தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். சமூக விரோதிகளால் தொடர்ச்சியாக தாக்கப்பட்டு வரும் நிகழ்வை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. புதிய கோட்டத் தலைவராக ஜி.சிவக்குமார், கோட்டச் செயலாளராக ஆர். கரிகாலன், கோட்டப் பொருளாளராக பி. லெட்சுமிபதி, கோட்ட உதவி தலைவர்களாக கே. பலராம், சி.அருண்ராஜ், எம்.காசி விஸ்வலிங்கம், ஜி. செந்தில்குமார், கே. மஞ்சுளா, கோட்ட உதவி செயலாளர்களாக ஆர்.வேந்தன், ஆர். அழகிரி, கே. செந்தில்குமார், பி. பழனி, எம்.தனபால் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். முன்னதாக, பொன்மலை சங்கத்திடலில் உள்ள பொன்மலை தியாகிகள் நினைவு ஸ்தூபிக்கு மாலை அணிவித்து, செவ்வணக்கம் செலுத்தப்பட்டது. பின்னர், அங்கிருந்து புறப்பட்ட பேரணி, மாநாட்டு அரங்கத்தை வந்தடைந்தது. உதவி கோட்டத் தலைவர் செந்தில்குமார் நன்றி கூறினார்.