tamilnadu

img

பொறியியல் மாணவர் சேர்க்கை: இன்று கலந்தாய்வு தொடக்கம்

பொறியியல் மாணவர் சேர்க்கை: இன்று கலந்தாய்வு தொடக்கம்

சென்னை,  ஜூலை 6 - தமிழகத்தில் 440-க்கும் மேற்பட்ட பொறி யியல் கல்லூரிகள் உள்ளன. இதில், அண்ணா பல்கலைக் கழக துறை கல்லூரிகள், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பொறி யியல் கல்லூரிகள், தனி யார் சுயநிதி கல்லூரிகள் என அனைத்து வகை  பொறியியல் கல்லூரி களும் அடங்கும். இந்த கல்லூரிகளில் பி.இ., பி.டெக்  படிப்பில் ஏறத்தாழ 2 லட்சம் இடங்கள்  பொது கலந்தாய்வு முறையில் நிரப்பப்படும். இந்தக் கலந்தாய்வை தமிழ்நாடு அரசு சார்பில் தொழில் நுட்பக் கல்வி இயக்ககம் ஆண்டுதோ றும் நடத்தி வருகிறது. இந்த கல்வி யாண்டு (2025-2026) பி.இ., பி.டெக் சேர்க்கைக்கான கலந்தாய்வுக்கான இணையவழி விண்ணப்பப் பதிவு கடந்த மே 7 ஆம் தேதி தொடங்கியது. இந்நிலையில், பொறியியல் மாண வர் சேர்க்கைக்கான சிறப்பு பிரிவு கலந் தாய்வு இணைய வழியில் திங்களன்று (ஜூலை 7) தொடங்குகிறது. இதன்படி பொறியியல் மாணவர் சேர்க்கைக் கான கலந்தாய்வு ஆகஸ்ட் 26 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த ஆண்டு 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயின்ற  மாணவர்களுக்கான அரசு ஒதுக்கீடு 7.5 விழுக்காட்டின் கீழ் 51,004 பேர் பொறி யியல் கலந்தாய்வுக்காக  விண்ணப்பித் துள்ளனர். இதில் பள்ளிக் கல்வித் துறையால் வழங்கப்பட்ட ஆவணங்க ளின் அடிப்படையில், 47,372 மாணவர் களுக்கு தரவரிசை எண் வழங்கப்பட்டு உள்ளது. இந்த எண்ணிக்கை சென்ற ஆண்டை விட 15,149 கூடுதலாகும். இந்த  7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டின்  கீழுள்ள சிறப்பு பிரிவினருக் கான கலந்தாய்வு ஜூலை 7 மற்றும் 8 ஆம் தேதி நடை பெற உள்ளது. பொது பிரிவினருக்கான சிறப்பு இட ஒதுக்கீடு கலந் தாய்வு ஜூலை 9 முதல்  11ஆம் தேதி வரை நடை பெறுகிறது. பொது கலந் தாய்வு ஜூலை 14 முதல் ஆகஸ்ட் 19 ஆம் தேதி வரை நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. துணை கலந்தாய்வு ஆகஸ்ட் 21 முதல் 23 ஆம் தேதி வரை  நடைபெறும் நிலையில், ஆகஸ்ட் 26 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.  ஆன்-லைன் கலந்தாய்வு மற்றும் அது தொடர்பான விவரங்களை அறிய  www.tneaonline.org என்ற இணைய தளத்தை மாணவர்கள் பார்வையிட லாம். பொறியியல் படிப்பிற்கான தர வரிசை பட்டியலில் கடந்த ஆண்டு 64  மாணவர்கள், 200 கலந்தாய்வு மதிப்பெண்  பெற்றிருந்த நிலையில், நடப்பாண் டில் 144 மாணவர்கள் முழு மதிப்பெண் களைப் பெற்றுள்ளது குறிப்பிடத் தக்கது.