மின் ஊழியர்கள், பொறியாளர்கள் ஆர்ப்பாட்டம்
கரூர், ஜூலை 21- அரசாணை எண் 100-ன் படி, 12.2.2024 இல் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்து அரசு உத்தரவாதத்துடன் கூடிய ஒப்பந்தமாக மாற்ற வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு (சிஐடியு), மின் துறை பொறியாளர் அமைப்பு, ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில் மாலை நேர கண்டன ஆர்ப்பாட்டம், கரூர் மின் ஊழியர் அலுவலகம் முன்பு நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு, மத்திய அமைப்பு சங்கத்தின் மாவட்ட தலைவர் வி. சுப்பிரமணியன் தலைமை வகித்தார். மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநிலச் செய லாளர் கே.தனபால், ஓய்வு பெற்றோர் நல அமைப்பு மாவட்டச் செயலாளர் கந்தசாமி, மாவட்டச் செயலாளர் பி.நெடுமாறன், பொறி யாளர் அமைப்பு மாவட்ட தலைவர் ஓ. சர வணக்குமார் ஆகியோர் உரையாற்றினர். குளித்தலை கோட்டச் செயலாளர் கே. செல்வம் நன்றி கூறினார்.