போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
தென்காசி, ஜூலை 26- தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் மாணவர்களிடம் போதைப்பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற சைக்கிள் பேரணியை காவல்துறை மாவட்ட துணை கண்காணிப்பாளர் பாஸ்கரன் பாபு கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த பேரணியில் காவல்துறையினர் மற்றும் சிவகாசி தனியார் கல்லூரி நிர்வாகிகள், பேராசிரியர்கள், மாணவர்கள் உட்பட 250-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
902 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்: ஒருவர் கைது
தஞ்சாவூர், ஜூலை 26- தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் கடற்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட விளங் குளம் சோதனைச் சாவடி யில், கடலோரக் காவல் படை துணை காவல் கண்கா ணிப்பாளர் முருகன் உத்தர வின்பேரில், ஆய்வாளர் மஞ்சுளா மேற்பார்வையில், உதவி ஆய்வாளர் சுப்பிர மணியன், சிறப்பு உதவி ஆய்வாளர் அய்யப்பசாமி மற்றும் காவலர்கள் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த னர். அப்போது, கட்டுமாவடி யிலிருந்து சேதுபாவா சத்திரம் நோக்கி, சந்தேகத் திற்கிடமாக இருசக்கர வாக னத்தில், இரண்டு மூட்டை களுடன் சென்றவரை நிறுத்தி விசாரணை செய்த னர். அவர் புதுப்பட்டி னத்தைச் சேர்ந்த சம்சுதீன்( 60) என்பதும், அவர் வைத்தி ருந்த இரண்டு மூட்டையில் ரேஷன் அரிசி மற்றும் எலெக்ட்ரானிக் தராசு இருப்பதும் தெரியவந்தது. விசாரணையில், அவர் சட்டவிரோதமாக ரேஷன் அரிசியை வாங்கி பதுக்கி வைத்து, அதனை விற்பனை செய்ததும் தெரியவந்தது. மேலும், மல்லிப்பட்டி னத்தில் கடை ஒன்றை வாடகைக்கு எடுத்து அதில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாகவும் தெரி வித்தார். மல்லிப்பட்டினம் கடையில் சோதனை செய்தபோது, அதில் சட்ட விரோதமாக பதுக்கி வைத்திருந்த 850 கிலோ ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, மொத்தம் 902 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து சம்சு தீனை கைது செய்தனர்.