tamilnadu

தீக்கதிர் முக்கிய செய்திகள்

டிபிஐ அலுவலகம் முற்றுகை:  சிறப்பு பயிற்றுநர்கள் கைது

சென்னை: தமிழ்நாடு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்றுநர்கள் சங்கத்தினர், சென்னையில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி அலுவலகத்தை (டிபிஐ) முற்றுகையிடும் போராட் டத்தை நடத்தினர். இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறப்பு பயிற்றுநர்கள் கலந்து கொண்ட நிலையில் அவர்களை காவல்துறையினர் கைது செய்து, நான்கு பிரிவுகளாக பிரித்து தனித்தனியாக திருமண மண்டபத்தில் அடைத்தனர். சிறப்பு பயிற்றுநர்களின் 25 ஆண்டுகள் பணிக் காலத்தை கருத்தில் கொண்டு, அவர்களை உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும், 2015-ஆம் ஆண்டு முதல் தொழிலாளர் வைப்பு நிதி வழங்க வேண்டும், ஊதிய உயர்வு  திட்டத்தில் அனைத்து பணியாளர்களையும் புறக்கணிக்கா மல் வழங்க வேண்டும் என உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி இந்த முற்றுகைப் போராட்டம் நடை பெற்றது.

 இமானுவேல் சேகரன் நினைவு தினம் பரமக்குடியில் இன்று கடைப்பிடிப்பு

சென்னை: இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரனின் 68-ஆம் ஆண்டு நினைவு  நாள் வியாழக்கிழமை (செப்.11)  அன்று கடைப்பிடிக்கப்படு கிறது. இதனால், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, 7 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். நினைவு தின நிகழ்ச்சியில் துணை முதல மைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அரசியல் கட்சி தலை வர்கள் பங்கேற்று மரியாதை செலுத்துகின்றனர்.

ஓ.என்.ஜி.சிக்கு வழங்கிய  அனுமதி ரத்து?  

சென்னை, செப். 10 - இராமநாதபுரம் மாவட்ட த்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க ஓ.என்.ஜி.சி.க்கு அனுமதி வழங்கப்பட்ட தக வல் அண்மையில் வெளி யானது. ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில் அனு மதியை திரும்பப் பெற தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்தது. அதன்படி இராம நாதபுரத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க ஓ.என்.ஜி.சி.க்கு வழங்கிய அனுமதியை ரத்துசெய்வது தொடர்பாக சுற்றுச்சூழல் தாக்க மதிப் பீட்டு ஆணையம் நட வடிக்கையில் இறங்கி யுள்ளது. சுற்றுச்சூழல் அனு மதியை ஏன் ரத்து செய்யக்கூ டாது என விளக்கம் கேட்டு ஓஎன்ஜிசிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.  

திருமண திட்டம்: 5,460 தங்க   நாணயங்கள் கொள்முதல்

சாதியப்  பாகுபாடு காட்டும் ஆசிரியர்கள் இடமாற்றம்! பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு சென்னை, செப்.10- பள்ளிகளில் சாதியப் பாகுபாட்டுடன் செயல்படும் ஆசிரியர்களை உடனடி யாக இடமாற்றம் செய்ய, முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குநர் கண்ணப்பன்  உத்தரவிட்டுள் ளார்.  ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலை மையில் ஒரு நபர் குழுவின் அறிக்கை யின் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  பள்ளிகளில் சாதி மற்றும் வகுப்பு வாத எண்ணத்தை மாணவர்களிடம் உண்டாக்கும் ஆசிரியர்கள் குறித்து புகார் வந்தால் அவர்களை வேறு பள்ளிக்கு மாற்ற வேண்டும் என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது.  மாணவர்களுக்கான பிரச்சனைகள் குறித்து வெளிப்படையாக புகார் அளிக்க பள்ளிகளில் ‘மாணவர் மனசு’ புகார் பெட்டி வைக்க வேண்டும் என்றும்  உத்தரவிடப்பட்டுள்ளது.

ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் உமர் காலித் மேல்முறையீடு

புதுதில்லி, செப். 10 - ஒன்றிய மோடி அரசால் பழி வாங்கப்பட்டு வரும் மாணவர் செயற்பாட்டாளர் உமர் காலித் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு மனு தாக்கல் செய்யப் பட்டுள்ளது. 2020-ஆம் ஆண்டு, வடகிழக்கு தில்லியில், ஷாகின்பாக் போராட் டத்தை ஒடுக்குவதற்காக, சங்-பரிவா ரங்கள் மிகமோசமான வன்முறை யைக் கட்டவிழ்த்து விட்டன. இதில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். ஆனால், ஒன்றிய  பாஜக அரசானது, பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் மீதும், எதிர்க்கட்சித் தலைவர்கள் மீதும் வழக்கு பதிந்து அவர்களைக் கைது செய்தது. தில்லி ஜேஎன்யு பல்கலைக்கழக ஆய்வு மாணவர்களான உமர்  காலித், சர்ஜீல் இமாம், அதர் கான், காலித் சைஃபீ, முகமது சலீன் கான், ஷிஃபா உர் ரஹ்மான், மீரான் ஹைதர், குல்ஃபிஷா ஃபாத்திமா, ஷாதப் அகமது ஆகியோரை சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (யுஏபிஏ) கீழ் கைது செய்து, சிறையில் அடைத்தது.  இதில், உமர் காலித் விசாரணை சிறைவாசியாகவே 5 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுக்களை 2022, 2024  ஆண்டுகளில் தில்லி உயர்நீதி மன்றம் தள்ளுபடி செய்தது. கடந்த  செப்டம்பர் 2 அன்று மீண்டும் ஜாமீன் மனுக்களை தில்லி உயர் நீதி மன்றம் தள்ளுபடி செய்தது. இந்த உத்தரவை எதிர்த்து, சர்ஜீல் இமாம், குல்ஃபிஷா ஃபாத்திமா ஆகியோர் சார்பில்  உச்ச நீதிமன்றத்தில் மேல்முறை யீடு மனுக்கள் தாக்கல் செய்யப் பட்டுள்ள நிலையில், மாணவ செயற்பாட்டாளர் உமர் காலித் சார்பில் வழக்கறிஞர் சாய் வினோத் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளார்.

 

 

சென்னை, செப். 10 - தமிழ்நாடு அரசின் சமூக நலத் துறையால் செயல் படுத்தப்படும் நான்கு திரு மண நிதியுதவித் திட்டங் களுக்கு 5,460 தங்க நாண யங்களை கொள்முதல் செய்ய தமிழக அரசு டெண்டர் கோரியுள்ளது. ஏழை, ஆதரவற்ற பெண் கள், மறுமணம் செய்யும் கைம்பெண்கள் மற்றும் சாதி மறுப்புத் திருமணம் செய்யும் பெண்களுக்கு அரசின் நிதியுதவித் திட்டங் கள் மூலம் உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. 8 கிராம் எடையில் 22 காரட்டில் மொத்தம் 5,640 தங்க நாணயங்கள் 45 கோடி ரூபாய் மதிப்பில் வாங்கப் பட உள்ளன. தங்க நாண யங்கள் உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள் இந்த டெண்டருக்கு அக்டோபர் 9 வரை விண்ணப்பிக்கலாம்.