tamilnadu

img

தூய்மைப்பணிளை தனியாருக்கு தாரை வார்க்காதே! திண்டுக்கல் மாநகராட்சியில் சிபிஎம் மனுக்கொடுக்கும் போராட்டம்

தூய்மைப்பணிளை தனியாருக்கு தாரை வார்க்காதே! திண்டுக்கல் மாநகராட்சியில் சிபிஎம் மனுக்கொடுக்கும் போராட்டம்

திண்டுக்கல், செப்.18- திண்டுக்கல் மாநகராட்சியில் தூய்மைப்பணியினை தனியா ருக்கு தாரைவார்க்காதே என்று வலி யுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக மனுக்கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. வியாழ னன்று மாலை நடைபெற்ற இந்நிகழ்  வில் மாநகராட்சி ஆணையர் செந்தில்  முருகனிடம் மனு அளிக்கப்பட்டது. மேலும் திண்டுக்கல் புறநகர் பேருந்து நிலையம் அமைக்க வேண்  டும். தெரு நாய்களை கட்டுப்படுத்த வேண்டும். பாதாளச் சாக்கடைத் திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய  மனு அளிக்கப்பட்டது. 8.33 விழுக்காடு  போனஸ் வழங்குக! மாநகராட்சிக்கு உட்பட்ட பல பகுதிகளில் உள்ள குண்டும் குழியு மான சாலைகளை சரி செய்திட வேண்டும். தெரு விளக்குகள், மழை நீர் மற்றும் கழிவு நீரோடைகளை பரா மரிக்க வேண்டும். தினசரி குப்பை களை உடனடியாக அகற்ற வேண் டும். தூய்மைப்பணியாளர்களுக்கு இந்த ஆண்டு தீபாவளி போனசாக 8.33 விழுக்காடு வழங்க வேண்டும். மாநகராட்சி சாலையோர வியாபாரி களுக்கு விற்பனைக்குழு தேர்தல் நடத்த வேண்டும். ஏற்கனவே பழனி  நகராட்சியில் நடத்தப்பட்ட நிலையில்  திண்டுக்கல் மாநகராட்சியிலும் விரை ந்து நடத்த வேண்டும் என்று சிபிஎம் தலைவர்கள் ஆணையரிடம் வலி யுறுத்தினர். இந்நிகழ்வில் சிபிஎம் மாவட்ட  செயற்குழு உறுப்பினர் பி.ஆஸாத்,  மாநகரச் செயலாளர் ஏ.அரபுமுக மது, மாமன்ற உறுப்பினர் கே.எஸ்.கணேசன், கே.மாரியம்மாள், சிஐ டியு மாவட்டச் செயலாளர் சி.பி.ஜெயசீலன், ஆட்டோ சங்க மாவட்டச்  செயலாளர் என்.பாண்டியன், சிபிஎம்  மாநகர் குழு உறுப்பினர்கள் என். கிருஷ்ணன், ஏ.அஜீத்குமார், வி. டியாகுஎமர்சன், ஆர்.விஷ்ணுவர்த தன், ஏ.மாரிமுத்து, ஏ.லதா, மாதர்  சங்க மாநகரச் செயலாளர் ஷோபா  திலகம், சாலையோர வியாபாரி கள் சங்க மாவட்டத் துணைச் செயலா ளர் எம்.ஜானகி, மாநகராட்சி கணக்காளர் முருகானந்தம், ஜான் போர்ஜியா (ஓய்வூதியர் சங்கம்) உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.