சுமைப் பணி தொழிலாளர்களுக்கு தனி நலவாரியம் அமைக்க கோரிக்கை
கரூர், ஜூலை 20 - சுமைப் பணி தொழிலாளர் சங்கத்தின் (சிஐடியு) கரூர் மாவட்ட 14 ஆவது ஆண்டு பேரவை, சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்டத் தலை வர் ஏ.விநாயகம் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டச் செயலாளர் சி.முருகே சன் பேரவையை துவக்கி வைத்து பேசினார். சங்கத்தின் மாநில துணைத் தலைவர் ஏ.பிச்சைமுத்து சிறப்புரையாற்றினார். கட்டு மான சங்க மாவட்டச் செயலாளர் சி.ஆர். ராஜாமுகமது, உள்ளாட்சி சங்க மாவட்டச் செயலாளர் எம்.சுப்பிரமணியன், சாலை யோர வியாபாரிகள் சங்க மாவட்டச் செயலா ளர் எம்.தண்டபாணி, மாவட்ட பொருளாளர் ப.சரவணன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். சங்க மாவட்ட குழு உறுப்பினர் வைரவன் நன்றி கூறினார். மாவட்டத்தின் புதிய தலைவராக ஏ.விநா யகம், செயலாளராக எஸ்.கிருஷ்ணமூர்த்தி, பொருளாளராக ப.சரவணன் உள்ளிட்ட 15 பேர் கொண்ட மாவட்டக் குழு உறுப்பி னர்கள் தேர்வு செய்யப்பட்டனர். சுமைப்பணி தொழிலாளர்களுக்கு தமிழ்நாடு அரசு தனி நலவாரியம் அமைத் திட வேண்டும். நலவாரிய செயல்பாடு களுக்கு தொழிலாளர்களின் பணப் பயன் களை வழங்குவதற்கு நலவரி வசூலிக்க வேண்டும். டாஸ்மாக் குடோன் சுமைப் பணி தொழிலாளர்கள் அனைவருக்கும் இபிஎப் தொகையை முறையாக செலுத்த வேண்டும். தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்குவதுடன் சீருடைகளும் வழங்க வேண்டும். 15 நாட்களுக்கு ஒரு முறை ஊதியம் வழங்க வேண்டும். சொந்த வீடு இல்லாத குடும்பங்களுக்கு அரசு, இலவச வீட்டு மனைப் பட்டா வழங்க வேண்டும். கட்டுமான நல வாரியம் போல வீடு கட்ட ரூ.4 லட்சம் உதவித்தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.