tamilnadu

img

குள்ளப்புரத்தில் விவசாயத்தை சீரழிக்கும் கிரஷர் -குவாரிகள்

குள்ளப்புரத்தில் விவசாயத்தை சீரழிக்கும் கிரஷர் -குவாரிகள்

குறைதீர் கூட்டத்தில் குள்ளப்புரம் விவசாயிகள் கோரிக்கை

தேனி, செப்.19- பெரியகுளம் ஒன்றியம்,  குள்ளப்புரத்தில் விவசா யத்தை சீரழிக்கும் கிரஷர்  -குவாரிகளை மூடவேண் டும், புதிய அனுமதி தரக் கூடாது என குறைதீர் கூட்  டத்தில் குள்ளப்புரம் தமிழ்  நாடு விவசாயிகள் கோரி க்கை விடுத்துள்ளது. தேனி மாவட்ட விவ சாயிகள் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங் தலைமையில் நடை பெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் ஐ.மகாலட்சுமி, வேளாண் இணை இயக்கு நர் சாந்தாமணி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவி யாளர் முத்து மாதவன் உள்  ளிட்ட பலர் கலந்து கொண்ட னர். கூட்டத்தில் பேசிய தமிழ்  நாடு விவசாயிகள் சங்க   மாவட்ட உதவி தலைவர் எம்.வி.முருகன், குள்ளப்புரத்  தில் 10க்கும் மேற்பட்ட குவாரி, கிரஷர்களால் மாசு  ஏற்பட்டு   விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படு கிறது. மகசூல் பாதிக்கப்படு வதோடு, அந்த பகுதிகளில்   நடக்க முடியவில்லை. கன ரக வாகனம் செல்வதால் சாலை சிதிலமடைந்து போக்குவரத்திற்கு லாயக்  கற்று உள்ளது. அந்த பகுதியில் உள்ள கிரஷர் மற்றும் குவாரிகளை மூட வேண்டும். புதிதாக அனுமதி கொடுக்கக் கூடாது. தூசு மண் பட்டு விவசாயம் பாதிக்கப்படுகிறது என்றார். அதற்கு பதிலளித்த மாவட்ட ஆட்சியர், நேரில்  சென்று ஆய்வு செய்ய அதி காரிகளுக்கு உத்தரவிட்டர். 18 ஆம் கால்வாய், தந்தை  பெரியார், பிடிஆர் கால்வாய்  ஆகியவற்றில் உடனடியாக தண்ணீர் திறக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர். தேனி ஒன்றிய பகுதி களில் தண்ணீர் பற்றாக் குறை காரணமாக கால்  நடைகள் பாதிக்கப்படு கிறது. நிலத்தடி நீர்மட்டம் குறைந்து கடும் வறட்சி ஏற்படுகிறது. எனவே தந்தை  பெரியார், பிடிஆர் கால் வாய்களில் தண்ணீர் திறக்க  வேண்டும் என விவாசாயி கள் சங்க நிர்வாகி பாஸ்க ரன் தெரிவித்தார். அதற்கு பதிலளித்த நீர்வளத்துறை அதிகாரி கள், அக்டோபர் மாதத்தில்  தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரி வித்தனர். எரசக்கநாயக்க னூர் பகுதிகளில் தாழ்வாக மின்கம்பங்கள் இருப்பதால் அடிக்கடி மின் தடை ஏற் படுகிறது. மலை கிராமங்களில் சாலை, மின்சாரம் இல்லை. ஊரடி ஊத்துக்காடு, சொக்கநிலை பகுதிகளில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. சாலை வசதி இல்லாததால் ஆசிரியர்கள் வருவதில் சிக்கல் உள்ளது. கேபிள் மூலம் மின்சாரம் வழங்க வேண்டும்  என விவசாயிகள் வேண்டுகோள் விடுத்தனர் . அதற்கு பதிலளித்த மாவட்ட வருவாய் அலுவலர், வனத் துறை சம்பந்தப்பட்ட விவ காரத்தில், வனத்துறை உயர்  அதிகாரிகள் பங்கேற்கும் கூட்டம் தனியாக நடத்தப் படும் என்றார்.