அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்ட தேர்தல் ஆணையத்திற்கு சிபிஎம் கடிதம்!
தமிழகத்திலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தமா?
சென்னை, ஜூலை 25 - பீகாரைப் போன்று தமிழகத்தி லும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (Special Intensive Revision - SIR) நடவடிக்கை மேற் கொள்ளப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், இது தொடர்பாக உடனடியாக அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி விவாதிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கிற்கு கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டிருப்ப தாவது: அதிர்ச்சியளிக்கும் சுற்றறிக்கை! தமிழ்நாட்டில் 2026-ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலையொட்டி, ஜனவரி 1-ஆம் தேதியை தகுதி ஏற்படுத்தும் நாளாக கொண்டு வாக்காளர் பட்டியலைத் திருத்தும் பணி என்பது இந்த ஆண்டும் வழக்கம் போல சுருக்கமுறைத் திருத்தமாக நடை பெறும் என எதிர்பார்க்கப் பட்டது. ஆனால், இன்றைய பத்திரிகை செய்திகளில் வெளி யிட்டுள்ள தகவல் அதிர்ச்சி யளிப்பதாக உள்ளன. தமிழகத்திலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை மேற்கொள்வதற்கான முன்னேற்பாடுகளை தொடங்கு மாறு இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளதாகவும், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அதற்கான பணிகளை துவங்கியுள்ள தாகவும், அதுகுறித்து மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ள தாகவும் அறிகிறோம். அச்சத்தில் தள்ளப்பட்ட பீகார் மாநில மக்கள் ஏற்கெனவே, பீகாரில் நடை பெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி குறித்து பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன. வாக்காளர்கள், இந்திய குடியுரிமைக்கான சான்றிதழ்களை சமர்ப்பித் தால் மட்டுமே வாக்காளர் பட்டியலில் அவர்களது பெயர்கள் இணைக்கப் படும் என்று கட்டாயப்படுத்தி வருவதன் காரணமாக, தங்களது பெயர்களை வாக்காளர் பட்டி யலிலிருந்து நீக்கி விடுவார்களோ, என்ற அச்சம் பீகார் மக்கள் மத்தியில் நிலவி வருகிறது. ஆலோசனை நடத்தாமல் திருத்த நடவடிக்கை கூடாது இந்தச்சூழலில், அரசியல் அமைப்புச் சட்ட ரீதியான முறையில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் ஆணையம், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் அடிப்படையில் அர சியல் கட்சிகளின் கூட்டத்தை நடத்தி, அவர்களுடைய ஆலோசனைகளை பெற்று அதனடிப்படையில் வாக்காளர் பட்டியல் சரி செய்யும் பணியினை நடத்த வேண்டுமென்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) கோருகிறது. அவசர கதியில் பீகாரில் நடை பெற்று வருவது போன்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி நடைபெற்றால் பல லட்சம் வாக்காளர்கள் பட்டியலிலிருந்து விடுபட்டு போய்விடும் ஆபத்து உள்ளது. முடிவெடுக்கும் வரை நிறுத்தி வைக்க வேண்டும் எனவே, தலைமை தேர்தல் அதிகாரி அனைத்து அரசியல் கட்சி களின் கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டுமென இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சார்பில் கோருகிறோம். மேலும், இந்தக் கூட்டம் நடைபெற்று முடிவுகள் எடுக்கப்படும் வரை, இதுகுறித்து மேல்நடவடிக்கை எதுவும் எடுக்கக் கூடாது என்றும் வலியுறுத்துகிறோம். தங்களுடைய நடவடிக்கையையும், உடனடி பதிலையும் எதிர்பார்க்கி றோம். இவ்வாறு கடிதத்தில் குறிப்பிடப் பட்டு உள்ளது.