கனிம வளக் கொள்ளையை தடுத்து நிறுத்த சிபிஎம் வலியுறுத்தல்
திருப்பூர், ஆக.7 - திருப்பூர் மாவட்டம் உடுமலை ஒன்றியம் ஜல்லிப் பட்டி ஊராட்சிக்குட்பட்ட வெங்கடாபுரம் கிராமத்தின் அருகில் சின்ன குமாரபாளையம் வருவாய் கிராமம் சீதாமடை குட்டையில் கடந்த ஒரு மாத காலமாக சட்டவிரோதமாக ஏராளமான லாரிகள் ஜேசிபி இயந்தி ரங்களை பயன்படுத்தி 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லோடுகள் மண், சரளை மண் குட்டையில் இருந்து திரு டப்பட்டுள்ளது. தொடர்ந்து இரவு பகலாக மிக ஆழமாக தோண்டப் பட்டு மண் திருடப்பட்டு வருகிறது. குட்டை பிரம்மாண்ட மான குழிகளாக மாறி மிக மோசமாக சேதடைந்துள் ளது. அந்த பாதையெங்கும் சேறும் சகதியுமாய் மாறி கடுமையாக சேதமடைந்துள்ளது. இது குறித்து அப்பகுதி பொதுமக்களும் விவசாயிக ளும் கிராம அலுவலருக்கு தகவல் கொடுத்தும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. வசதி படைத் தவர்களும், அதிகார வர்க்கத்தினரும் இணைந்து நடத்தும் மண் திருட்டால் இயற்கை வளம் தினந் தோறும் பல லட்சம் ரூபாய் மதிப்பில் கொள்ளையடிக் கப்பட்டு நாசமாக்கப்படுகிறது. எனவே இயற்கை வளங்களான குட்டை மண்ணை அள்ளிக் கொண்டு இருக்கும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து முழுமையான மண் திருட்டு கும்பல்களை கைது செய்ய வேண்டுமென மாவட்ட நிர்வாகத்தையும், வருவாய் துறையையும் தமிழக அரசையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உடுமலை ஒன்றிய குழுவின் சார்பில் வலி யுறுத்தி கேட்டுக் கொள்வதாக ஒன்றியச் செயலாளர் ஜெகதீசன் கூறியுள்ளார்.
தங்கக் கட்டிகள் கொள்ளையடித்த வழக்கு: மேலும் ஒருவர் கைது
கோவை, ஆக.7- எட்டிமடை அருகே கேரளா வியாபாரியிடம் 1.25 கிலோ தங்க கட்டிகள் கொள்ளையடித்த வழக்கில் மேலும் ஒருவரை தனிப்படை போலீசார் கைது செய்த னர். கேரளம் மாநிலம், திருச்சூரை சேர்ந்தவர் ஜெய்சன் ஜேக்கப் (51). நகைக்கடை வியாபாரி இவர் கடந்த ஜூன் 14 ஆம் தேதியன்று சென்னையிலிருந்து 1.25 கிலோ தங்க கட்டிகளை வாங்கிக் கொண்டு கோவை வந்தார். பின்னர் கார் மூலம் கேரளம் நோக்கிச் சென்றார். அப்போது எட்டி மடை அருகே வந்தபோது லாரியால் மோதி வழிம றித்த அடையாளம் தெரியாத கும்பல் அவரிடம் இருந்த 1.25 கிலோ தங்க கட்டிகள் மற்றும் காரிலிருந்த ரூ.60 ஆயி ரம் பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர். இச்சம்ப வம் தொடர்பாக கே.ஜி சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து 5 தனிப்படைகள் அமைத்து இந்த கும்பலை தேடி வந்தனர். இவ்வழக்கில் இதுவரை கேரளம் மாநிலத் தைச் சேர்ந்த அன்சத், விஷ்னு, அஜித், சனீஸ், கோகுல் ஆகிய ஐந்து பேரை தனிப்படை போலீசார் கைது செய்தி ருந்தனர். இந்நிலையில் மேலும் சிலரை தேடி கேரளா வில் முகாமிட்டுள்ள தனிப்படை போலீசார் கொச்சி யில் பதுங்கி இருந்த கருண் சிவதாஸ் (32), என்பவரை கைது செய்தனர். கொச்சியில் டீக்கடை நடத்தி வரும் கருண் சிவதாஸ் சக நண்பர்களுடன் சேர்ந்து கொள் ளைத் திட்டத்தை அரங்கேற்றியது தெரியவந்தது.
பள்ளிகளில் தூய்மை பணியர்களுக்கு காலம் தாழ்த்தாமல் ஊதியம் வழங்க வலியுறுத்தல்
திருப்பூர், ஆக.7- திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட பள்ளிகளில் பணிபு ரியும் தூய்மை பணியர்களுக்கு ஊதியம் கடந்த இரண்டு மாதமாக வழங்கப்படாமல் உள்ளது. எனவே உடனடியாக ஊதியம் வழங்க மாநகராட்சி ஆணையரி டம் வியாழனன்று, தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் திருப்பூர் தெற்கு மாநகர கிளை நிர்வாகி கள் மனு அளித்தனர். பள்ளிகளில் தற்காலிக அடிப்படையில் தூய்மைப் பணி செய்பவர்களுக்கு மாத இறுதி நாளில் ஊதியம் வழங்காமல் காலம் தாழ்த்துவதால் அவர்கள் தொடர்ச்சி யாக பணிக்கு வராமல் நின்று விடும் சூழல் ஏற்படு கிறது. எனவே மாத இறுதிநாளில் தூய்மை பணியாளர் களுக்கு ஊதியம் வழங்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளனர். சங்கத்தின் தலைவர் சங்கர், செயலா ளர் கனகராஜா, பொருளாளர் பிரமா ஆகியோர் பங்கேற்றனர்.
அரசு இலவச பயிற்சி மூலம் 27 மாணவர்கள் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தனர்
திருப்பூர், ஆக.7- நாடு முழுவதும் மருத்துவப் படிப்புகளுக்கு நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. அதன்படி 2025-26 ஆம் கல்வியாண்டு சேர்க்கைக்கான நீட் தேர்வு கடந்த மே 4 ஆம் தேதி நடைபெற்றது. இதில், திருப்பூர் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள் ளிகளைச் சேர்ந்த 354 மாணவ, மாணவிகளும் தேர்வு எழுதினர். நீட் தேர்வு முடிவுகள் கடந்த ஜூன் மாதம் 14 ஆம் தேதி வெளியானது. இதில் திருப்பூர் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இருந்து நீட் தேர்வு எழுதிய 354 மாணவ மாணவியர்களின் 163 பேர் தேர்ச்சி அடைந்தனர். இதை தொடர்ந்து மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு ஜூலை 30 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்து நீட் தேர்வை எழுதி 7.5% இட ஒதுக்கீட்டில் இம்மாவட்டத்தில் 27 மாண வர்கள் மருத்துவ கலந்தாய்வு மூலம் மருத்துவ கல்லூரி களில் சேர்க்கை பெற்றுள்ளனர். இவர்களில் 21 பேர் எம்பிபிஎஸ் மருத்துவம், 6 பேர் பல் மருத்துவத்தை தேர்வு செய்துள்ளனர். மேலும் 10 பேருக்கு பல் மருத்துவப் படிப்பிற்கு இடம் கிடைத்தும் வேறு துறைகளை தேர்வு செய்வதற்காக இதில் சேர வில்லை. 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் வராத அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்ற நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற 9 மாணவர்கள் பொது கலந்தாய்வில் கலந்து கொண்டு தங்களுக்கான கல்லூரிகளை தேர்வு செய்ய உள்ளனர். அரசு சார் பில் பள்ளிகளிலேயே வழங்கிய நீட் இலவச பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டு பயிற்சி பெற்றோர் தேர்வாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.