tamilnadu

img

விவசாயிகளின் நெல் மூட்டைகளை உடனே கொள்முதல் செய்யக் கோரி சிபிஎம் ஆர்ப்பாட்டம்

விவசாயிகளின் நெல் மூட்டைகளை உடனே கொள்முதல் செய்யக் கோரி சிபிஎம் ஆர்ப்பாட்டம்

பாபநாசம், அக். 12-  நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு வரும் விவசாயிகளின் நெல் மூட்டைகளை உடனுக்குடன் கொள்முதல் செய்ய வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே, அம்மாப்பேட்டையில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு அம்மாப்பேட்டை நகரச் செயலாளர் துரைராஜ் தலைமை வகித்தார். இதில், தமிழக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் உடனுக்குடன் நெல் கொள்முதல் செய்ய வேண்டும். நெல்லிற்கு 20 சதவீதம் ஈரப்பதம் வரை கொள்முதல் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட  கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.  மாவட்டச் செயற்குழு உறுப்பினர் மனோகரன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் பக்கிரிசாமி, நம்பிராஜன், ஒன்றியச் செயலாளர் ரவி உட்பட ஒன்றியக் குழு உறுப்பினர்கள், விவசாயிகள், பொதுமக்கள் பங்கேற்றனர்.