திருப்பூர், ஆக. 8 - இந்திய அரசியல் சட்டம் மக்களுக்கு வழங்கியுள்ள அடிப்படை உரிமையான வாக்குரிமையைப் பறிக்கும் விதத்தில் தேர்தல் ஆணையத்தின் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கை உள்ளதால், அதைக் கைவிட வலியுறுத்தி திருப்பூ ரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் எதிரில் வெள்ளியன்று நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கட்சியின் திருப்பூர் வடக்கு ஒன்றியச் செயலாளர் ஆர்.காளியப்பன் தலைமை ஏற்றார். இந்த ஆர்ப்பாட்டத்தில், அரசி யல் சட்டப்படி சுயேட்சையாக செயல் பட வேண்டிய தேர்தல் ஆணையம் ஆளும் பாஜக அரசின் வாலாக உள் ளது. அவர்களது விருப்பப்படி ஆர்எஸ் எஸ் அமைப்பின் பாசிச நோக்கத்திற்கு ஏற்ப குடிமக்களின் உரிமையைப் பறிக் கும் வேலையைச் செய்து கொண்டி ருக்கிறது என இதனை கண்டித்து, கட்சி யின் மாவட்டக்குழு உறுப்பினர் எஸ். பிரவீன், மாவட்ட செயற்குழு உறுப்பி னர் எஸ்.பவித்ரா தேவி, மாநிலக்குழு உறுப்பினர் தௌ.சம்சீர் அகமது, மாவட்டச் செயலாளர் சி.மூர்த்தி, மாநி லக்குழு உறுப்பினர் கே.காமராஜ் ஆகி யோர் உரையாற்றினர். இதில் கட்சி யின் இடைக்குழுச் செயலாளர்கள், இடைக்குழு உறுப்பினர்கள், கட்சி அணி யினர் திரளானோர் கலந்து கொண்டு கண்டனம் முழங்கினர்.