சிபிஎம் உறுப்பினர் அட்டை வழங்கும் பேரவை
திருவாரூர், ஆக. 23- திருவாரூர் மாவட்டம் குடவாசல் தெற்கு ஒன்றியத்தில் சிபிஎம் உறுப்பினர்களுக்கு ரசீது வழங்கும் பேரவை, தியாகி தங்கையன் நினைவகத்தில் நடைபெற்றது. பேரவைக்கு, குடவாசல் ஒன்றியச் செயலாளர் டி.லெனின் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் டி. முருகையன் பங்கேற்று, கட்சி உறுப்பினர்களுக்கு ரசீது வழங்கி சிறப்புரையாற்றினார். முன்னதாக, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.சுந்தர மூர்த்தி கட்சி ஸ்தாபனம் என்ற தலைப்பில் உரையாற்றினார், ரசீது வழங்கும் பேரவையில் மாவட்டக் குழு உறுப்பினர் ஆர். லெட்சுமி, மூத்த தோழர்கள் எப். கெரக்கோரியா, எஸ். கிறிஸ்துவநாதன் மற்றும் ஒன்றியக்குழு உறுப்பினர்கள், கட்சி உறுப்பினர் கலந்து கொண்டனர். மன்னார்குடி மன்னார்குடியில் நடைபெற்ற நிகழ்வுக்கு நகரக் குழுச் செயலாளர் ஜி. தாயுமானவன் தலைமை வகித்தார். ஒன்றியக் குழுச் செயலாளர் கே. ஜெயபால் மற்றும் பொறுப்பு செயலாளர் சத்தியசீலன் முன்னிலை வகித்தனர். நகரக் குழு உறுப்பினர் ஜி.முத்துக்கிருஷ்ணன் அனைவரையும் வரவேற்றார். கட்சியின் மூத்த உறுப்பினர்கள் ஜி.ரகுபதி, டி.ஜெகதீசன் உள்ளிட்டோர் பேசினர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.பி. ஜோதிபாசு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திட்டம் மற்றும் நிகழ்கால கொள்கை நிலைப்பாடுகளைப் பற்றி பேசினார். கட்சி உறுப்பினர் அட்டைகளை மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி. நாக ராஜன் அனை வருக்கும் வழங்கி சிறப்பு ரையாற்றினார். நீடாமங்கலம் ஒன்றியக் குழுச் செயலாளர் டி.டி. ஜான் கென்னடி தலைமை ஏற்றார். மாவட்டக் குழு உறுப்பினர் வி.எஸ். கலிய பெருமாள் உள்ளிட்டோர் பேசினர். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பி. கந்தசாமி, என். ராதா ஆகியோர் கட்சி உறுப்பினர் அட்டைகளை வழங்கி உரை யாற்றினர்.