tamilnadu

img

ஒரே நேரத்தில் 2 கிடேரி கன்றுகளை ஈன்ற பசுமாடு

ஒரே நேரத்தில் 2 கிடேரி  கன்றுகளை ஈன்ற பசுமாடு

பாபநாசம், செப். 8-  தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தை அடுத்த அய்யம்பேட்டை அருகே, கோவிந்தநாட்டுச்சேரி ஊராட்சி நாயக்கர் பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி அர்ஜுனன். இவர், கடந்த டிசம்பர் மாதம் புத்தூரில் உள்ள அரசு கால்நடை மருந்தகத்தில் தனது கலப்பின பசு மாட்டிற்கு செயற்கை முறை கருவூட்டல் செய்திருந்தார்.  இந்நிலையில், அந்த மாடு சனிக்கிழமை இரண்டு கிடேரி கன்றுகளை ஈன்றது. இதையடுத்து, கால்நடை உதவி மருத்துவர் சங்கமித்ரா, பசுமாடு, கன்றுகளை நேரில் பார்வையிட்டு, அவற்றினை பராமரிப்பது குறித்து அர்ஜுனன் குடும்பத்தினரிடம் விளக்கிக் கூறினார். பசுமாடு இரண்டு கன்றுகளை ஈன்ற தகவல் அப்பகுதியில் பரவிய நிலையில், கிராம மக்கள் பசுவையும், கன்றுகளையும் ஆச்சரியத்துடன் பார்த்துச் சென்றனர்.