திருச்சி, டிச.21- ஒன்றிய பாஜக அரசின் தொழிலாளர் விரோத நடவடிக்கைகளை கண்டித்தும் தனியார்மய கொள்கைகளை எதிர்த்தும் அகில இந்திய அளவில் அனைத்து தொழிற் சங்கங்களும் வரும் பிப்ரவரி 23,24 தேதிகளில் நடத்தும் பொது வேலை நிறுத்த போராட்டத்தில் அனைத்து கூட்டுறவு சங்க ஊழியர்கள் அனைவரும் பங்கேற்று வேலை நிறுத்த போராட்டத்தை வெற்றி பெற செய்வது என்று தமிழ்நாடு கூட்டுறவு ஊழியர் சம்மேளனம் முடிவு செய்துள்ளது. தமிழ்நாடு கூட்டுறவு ஊழியர் சம்மேளனத்தின் மாநில நிர்வாகிகள் கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. மாநிலத் தலை வர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். மாநில செயல் தலைவர் அசோகன், பொது செயலாளர் ஜீவானந்தம், துணை பொதுச் செயலாளர்கள் கௌதமன், மனோகரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
கூட்டுறவு சங்க ஊழியர்கள் மற்றும் நியாய விலைகடை ஊழி யர்களுக்கும் வழங்க வேண்டிய கொரோனா கால தினப்படி, ஊக்கத்தொகை, ஆகியவற்றை உடனடியாக வழங்க வேண்டும். நகை கடன், பயிர் கடன் சரிபார்ப்பு என்ற வகையில் ஊழியர்கள் மீதான தேவையற்ற நடவடிக் கைகளை கைவிடவேண்டும். பொங்கல் மளிகை தொகுப்பு மற்றும் சிறப்பு தொகுப்பு பொது விநியோக திட்டத்தில் பணி யாற்றும் கூட்டுறவு சங்க ஊழி யர்களுக்கு குடும்ப அட்டை ஓன்றுக்கு ரூ.10 வீதம் ஊக்கத் தொகை வழங்கவேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. தமிழகத்தில் இருக்கக் கூடிய அனைத்து கூட்டுறவு அச்சக தொழிலாளர்களுக்கும் சம்பள உயர்வு அறிவிக்கப்பட்டாலும் திருச்சி உள்ளிட்ட அச்சக ஊழி யர்களுக்கு இன்னும் சம்பள உயர்வு ஓப்பந்தம் ஏற்படாத காரணத்தால் அவற்றை தீர்வு காண உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.