ஒப்பந்ததாரரிடம் கத்தியை காட்டி ரூ.10 லட்சம் பறிப்பு
அம்பத்தூர், அக். 8- சென்னை கோடம் பாக்கம் சிவன் கோவில் தெருவைச் சேர்ந்த சாலை அமைக்கும் ஒப்பந்ததாரர் சுதாகர் (43) தன்னிடம் ரூ.500 நோட்டுகளாக இருந்த ரூ.10 லட்சத்தை ரூ.100, ரூ.200 ஆகிய சில்லறை நோட்டுகளாக மாற்ற முடிவு செய்துள்ளார். இதற்காக தெரிந்தவர்கள் மூலம் திருவேற்காடு அயனம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (25) மற்றும் திருபெரும்புதூர் பகுதியைச் சேர்ந்த திரு நாவுக்கரசு (48) ஆகியோரை அணுகியுள்ளார். செவ்வாயன்று திரு வேற்காடு அருகே அயனம்பாக்கம் மெட்ரோ சிட்டி பகுதியில் நண்பர்க ளுடன் காரில் காத்திருந்த போது 2 இருசக்கர வாக னங்களில் வந்த 4 மர்ம நபர்கள் காரில் இருந்த சுதா கரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி அவர் வைத்திருந்த ரூ.10 லட்சத்தை பறித்துச் சென்றனர். இதுகுறித்து சுதாகர் திருவேற்காடு காவல் நிலை யத்தில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் திருநாவுக்கரசு, மணிகண்டன் இருவரையும் பிடித்து விசாரித்து வரு கின்றனர். சுதாகர் பணம் கொண்டு வருவது குறித்து வழிப்பறியில் ஈடுபட்ட நபர்களுக்கு எப்படி தெரிந்தது என காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.