tamilnadu

சென்னை விரைவு செய்திகள்

ஆற்காடு நகராட்சியில் எதிரொலித்த ஒப்பந்த பணியாளர் பிரச்சனை

ராணிப்பேட்டை, ஆக. 1 -  ஆற்காடு நகராட்சிக்கு உட்பட்ட வார்டுகளில் விடு பட்டுள்ள சிமெண்ட் சாலை, கழிவு நீர் கால்வாய் கட்டுதல் உள்ளிட்ட அனைத்து பணிக ளும் விரைவில் நிறை வேற்றித் தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என நகர மன்ற கூட்டத்தில் நகர  மன்ற தலைவர் தேவி பென்ஸ் பாண்டியன் உறுதி அளித்துள்ளார். நகராட்சியில் ஒப்பந்த தொழிலாளர்கள் பணி நீக்கம் செய்வது குறித்து கேள்வி எழுப்ப பட்டது. இதற்கு பதில ளித்த ஆணையர், வயது முதிர்வு காரணமாக 30 க்கும் மேற்பட்டோர் வேலை செய்வதை நிறுத்தி விட்டதாகவும், காலியாக உள்ள பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று கூறினார். நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மாடு, பன்றி, நாய்கள் அதிக அளவில் சுற்றி திரிவதை கட்டு படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். 3வது வார்டில் ரேசன் கடை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 18 வது வார்டில் சிதலமடைந்த பழைய பள்ளி கட்டிடம் புதுப்பிக்க வேண்டும். 19வது வார்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகள் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் துணை தலைவர் பவளக்கொடி சரவணன், ஆணையாளர் வெங்கட் லட்சு மணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து நகர மன்ற உறுப்பினர்கள் தங்கள் பகுதியில் உள்ள பிரச்சனைகள் குறித்து பேசினர்.

மனைவி அடித்து கொலை: கணவன் சரண்

அண்ணாநகர் ஆக.1  சிறுதானியம் சமைத்து தர மறுத்ததால், மனைவியை அடித்து கொன்ற கணவன், காவல் நிலை யத்தில் சரணடைந்தார். கோயம்பேடு ஜெயின் நகர் 3வது தெருவில் உள்ள தனியார் மகளிர் விடுதி யில் பணிபுரிந்து வந்தவர் அருள்மணி (45). இவரது கணவர் ராதாகிருஷ்ணன் (48). இவர் திரு வல்லிக்கேணியில் உள்ள டீக்கடையில் மாஸ்டராக உள்ளார். தம்பதிக்கு 2 மகன்கள். மூத்த மகன் பொறியி யல் படித்து வருகிறார். 2வது மகன் 9ம் வகுப்பு படித்து வரு கிறார். அருள்மணி தனது குடும்பத்துடன், மகளிர் விடுதி யில் உள்ள ஒரு அறையில் வசித்து வந்தார். ராதா கிருஷ்ணனுக்கு மது பழக்கம் உள்ளதால், வியா ழனன்று திடீரென சிறுதானி யம் உணவு செய்துகேட்டுள் ளார். ஏற்கெனவே செய்த உணவு வீணாகுமே என்று கூறியதற்கு போதை வெறி யில் அவரை அடித்துக் கொன்று விட்டு அருகில் உள்ள காவல்நிலையத்தில் சரண் அடைந்தார்.

பாகூர் குருவிநத்தம் மக்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி சிபிஎம் தெருமுனை கூட்டம்

புதுச்சேரி, ஆக.1- குருவிநத்தம் பகுதி மக்களின் அடிப்படை பிரச்சனைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் தெருமுனை கூட்டம் நடைபெற்றது. புதுச்சேரி மாநிலம், பாகூர் பெரியார் நகரில் நீண்ட காலமாக வசித்து வரும் மக்களுக்கு இலவச மனைப் பட்டா மற்றும் வீடு கட்ட மானி யம் வழங்க வேண்டும். பெரியார் நகரில் பேருந்து நிழற்குடை, சமுதாய நலக்கூடம் மற்றும் விளையாட்டு மைதானம் அமைக்க வேண்டும். சேதமடைந்துள்ள பெரியார் நகர் கருமாரி கொட்டகையை புதுப்பித்து குடி நீர் வசதி ஏற்படுத்த வேண்டும், சாலைகள் மற்றும் கழிவுநீர் வாய்க்கால்களை சீரமைக்க வேண்டும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாண வர்களுக்கு குடியிருப்பு பகுதிகளுக்கு சென்று மாலை நேர சிறப்பு வகுப்புகள் ஆதிதிராவிடர் நலத்துறை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பாகூர் குருவிநத்தம் பெரியார் நகரில் நடைபெற்ற தெருமுனை கூட்டத்திற்கு சிபிஎம் பாகூர் கொம்யூன் கமிட்டி செயலாளர் சரவணன் தலைமை தாங்கினார். கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் வெ.பெருமாள் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். செயற்குழு உறுப்பினர் தமிழ்ச்செல்வன், மாநிலக் குழு உறுப்பினர்கள் கலியன், இள வரசி, கமிட்டி உறுப்பினர்கள் வடிவேல், குப்பம்மாள், ஹரிதாஸ், கிளைச் செயலாளர்கள் சேகர், ஜெயராஜ் உட்பட திரளானோர் கூட்டத்தில் பங்கேற்றனர்.

தேன்கனிக்கோட்டையில் கலைக்குழு பிரச்சாரம்

கிருஷ்ணகிரி, ஆக.1- தருமபுரியில் இம் மாதம் 5, 6, 7 தேதிகளில் நடை பெற இருக்கும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழி யர் சம்மேளன (சிஐடியு) 16 ஆவது மாநில மாநாட்டை விளக்கி வி.பி.சிந்தன் கலைக்குழு சார்பில் தேன்கனிக்கோட்டை பேருந்து நிலையத்தில் பிரச்சாரம் நடைபெற்றது. அரசு போக்குவரத்து துறையில் மினி வேன் மூலம் தனியார் போக்குவரத்தை புகுத்தாதே, நிரந்தர வேலை வாய்ப்பை தொடர்ந்து அமல்படுத்து, தனியார் துறையை புகுத்தாதே, பழைய ஓய்வூதிய திட்டத்தை ஊழியர்கள் அனைவருக்கும் அமல்படுத்து உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கலை நிகழ்ச்சிகள் மூலம் மாநில மாநாட்டு பிரச்சாரம் செய்யப்பட்டது. அரசு போக்கு வரத்து தொழிலாளர் சங்கத்தின் (சிஐடியு) கிளைத் தலை வர் கோவிந்தன், சிபிஎம் மாவட்டச் செயலாளர் சுரேஷ், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.சேகர், சி.பி.ஜெய ராமன், மாவட்டக் குழு உறுப்பினர் அனுமப்பா ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.