tamilnadu

img

கட்டுமானத் தொழிலாளர்கள் சங்க  மாநில மாநாட்டு ஜோதி பயண நிகழ்ச்சி

கட்டுமானத் தொழிலாளர்கள் சங்க  மாநில மாநாட்டு ஜோதி பயண நிகழ்ச்சி

திருச்சிராப்பள்ளி, அக். 5-  சிஐடியு கட்டுமானத் தொழிலாளர்கள் சங்க 10 ஆவது மாநில மாநாடு காங்கேயத்தில் ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளில் நடைபெறுகிறது.  இதையொட்டி திருச்சி புறநகர் மாவட்டம் மண்ணச்சநல்லூரில் இருந்து கட்டுமானத் தொழிலாளர்கள் சங்கம் சார்பில், ஞாயிறன்று தோழர் பூமாலை நினைவு ஜோதி பயண துவக்க நிகழ்ச்சி நடந்தது.  நிகழ்ச்சிக்கு கட்டுமானத் தொழிலா ளர்கள் சங்க மாவட்டத் தலைவர் சிவக்குமார் தலைமை வகித்தார். சிபிஎம் ஒன்றியச் செயலாளர் என். சுப்பிரமணியன் வரவேற்றார். ஜோதியை அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்க மாவட்டச் செயலாளர் சுப்பிரமணியன் ஏற்றி வைத்தார். ஜோதியை சிஐடியு புறநகர் மாவட்டச் செயலாளர் சம்பத் எடுத்துக் கொடுக்க, அதனை கட்டுமானத் தொழிலாளர்கள் சங்க மாநில துணைச் செயலாளர் ராஜாமுகமது பெற்றுக் கொண்டார். சிஐடியு புறநகர் மாவட்டத் தலைவர் பன்னீர்செல்வம் வாழ்த்துரை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், கட்டுமானத் தொழி லாளர்கள் சங்க மாவட்டச் செயலாளர் தியாகராஜன், மாவட்டத் தலைவர் சிவக்குமார், மாவட்டப் பொருளாளர் மரியபுஷ்பம் உள்பட பலர் கலந்து கொண்டனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றியத் தலைவர் முருகேசன் நன்றி கூறினார்.