tamilnadu

img

தோழர் சீத்தாராம் யெச்சூரி நினைவுதின கருத்தரங்கம்

தோழர் சீத்தாராம் யெச்சூரி நினைவுதின கருத்தரங்கம்

நாகப்பட்டினம், செப். 23- தோழர் சீத்தாராம் யெச்சூரி அவர்களின் முதலாமாண்டு நினைவு தின கருத்தரங்கம் திங்கள்கிழமை அன்று  மாலை நாகப்பட்டினத்தில் உள்ள தனியார் திருமண மண்ட பத்தில் நடைபெற்றது.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நாகப்பட்டினம் மாவட்டக் குழு சார்பில் நடைபெற்ற நிகழ்வில் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் டி.லதா தலைமை தாங்கினார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் வி.சுப்பிர மணியன் முன்னிலை வகித்தார்.  முன்னாள் சட்டமன்ற உறுப்பின ரும்,  மாவட்டச் செயலாளருமான வி.மாரிமுத்து, கீழ்வேளூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.பி.நாகை மாலி, மாநிலக்குழு உறுப்பினர் இரா.சிந்தன், இந்திய மாணவர் சங்க  மாநிலத் தலைவர் சி.மிருதுளா ஆகி யோர் கருத்துரையாற்றினர்.  அரசியல் தலைமைக்குழு உறுப்பி னர் கே.பாலகிருஷ்ணன் நிறைவுரை யாற்றினார்.  மாவட்டச் செயற்குழு உறுப்பினர் பி.சுபாஷ் சந்திரபோஸ் நன்றியுரையாற்றினார்.