tamilnadu

img

தோழர் அய்யாவு படத்திறப்பு

தோழர் அய்யாவு படத்திறப்பு

ஈரோடு, அக்.13- மக்கள் நலனுக்காக பாடு பட்ட மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்டு கட்சியின் மகத்தான தோழர் ஏ.அய்யாவு அவர்க ளின் புகழஞ்சலி மற்றும்  படத்திறப்பு நிகழ்வு திங்க ளன்று கவுந்தப்பாடியில் நடைபெற்றது. விவசாய குடும்பத்தில் பிறந்து, 1980 காலகட்டத்தில் நாரயணசாமி நாயுடுவின் விவசாயிகள் சங்கத்தில் இணைந்து பணியாற்றினார். பின்னர், மார்க் சிஸ்ட் கட்சியின் மூத்த தோழர் எம்.என்.காளி யன்னனின் தொடர்பு ஏற்பட்டு, மார்க்சிஸ்ட்  கட்சியிலும், விவசாயிகள் சங்கத்தினாலும் ஈர்க்கப்பட்டு களப்பணியாற்றினார். பின்னாளில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழுவிலும், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தின் மாவட்டத் தலைவர், கரும்பு விவசாயி கள் சங்க மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட பொறுப்புகளில் திறம்பட பணியாற்றினார். வயது மூப்பின் காரணமாக தோழர் அய் யாவு செப்டம்பர் மாதம் 19 ஆம் தேதி கால மானார்.  இவரின் படத்திறப்பு நிகழ்வு கவுந்தப்பாடி யில் திங்களன்று நடைபெற்றது. தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் ஏ. எம்.முனுசாமி தலைமை வகித்தார். இதில்,  மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் டி.ரவீந்திரன் படத்தை திறந்து வைத்தார். மாநிலக் குழு உறுப்பினர் வீ.அமிர் தலிங்கம், தமிழ்நாடு மலை வாழ் மக்கள் சங்க  மாநிலத் தலைவர் பி.டில்லிபாபு, சிபிஎம்  மாவட்டச் செயலாளர் ஆர்.ரகுராமன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.பி.பழனி சாமி, தவிச மாவட்டத் தலைவர் எஸ்.வி. மாரிமுத்து, அகில இந்திய விவசாயித்  தொழிலாளர் சங்கத்தின் தாலுகா செயலாளர்  எஸ்.மாணிக்கம், பிபிஎம் தாலுகா செயலாளர்  ஆர்.பிரகாஷ், எம்.ஆர்.பெரியசாமி, ஏ.ஏம். நடராஜன், ஏ.ஜெகநாதன், என்.பாலமுருகன்  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிறை வாக கே.ஆர்.சண்முகம் நன்றி கூறினார்.