சேலத்தில் விரைவில் ஒருங்கிணைந்த ஜவுளிப் பூங்கா அமைக்கப் படும் என்றும் 120 கோடி ரூபாய் மதிப்பில் ரயில்வே மேம்பாலம் அமைக்கப்படும் என்றும் அரசு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் அறிவித்துள்ளார்.
குன்னூர் ஹெலி காப்டர் விபத்தில் உயிரிழந்த ஆந்திராவை சேர்ந்த ராணுவ வீரர் சாய் தேஜா குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் நிதி வழங்கப்படும் என்று ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறி வித்துள்ளார்.
இந்திய வம்சாவளியின ரான கவுதம் ராகவன் அமெரிக்க வெள்ளை மாளி கையின் ஜனாதிபதிக்கான அதிகாரிகள் அலுவலக தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தைவானுடனான தூதரக ரீதியான உறவுகளை முறித்துக் கொள் வதாக நிகரகுவா அறிவித்திருக்கிறது. ஒரு சீனா என்ற கொள்கையை ஏற்றுக் கொள்ளும் நிகரகுவா, அதை மேலும் நடை முறைப்படுத்தும் வகையில் இந்த உறவுகளை நிறுத்திக் கொள்வதாக முடிவெடுத்துள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வமாக நிகரகுவா வெளி யுறவுத்துறை அமைச்சகர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சீனாவும், தைவானும் ஒட்டுமொத்த சீனத்தின் பகுதிகளாகும்” என்று கூறியிருக்கிறது.
அமெரிக்க ஆயுதங்கள் இருந்தால் அதை அழித்து விடுங்கள் அல்லது கிடங்குகளில் வையுங்கள் என்று தன் நாட்டு ராணு வத்திற்கு கம்போடிய பிரதமர் ஹன் சென் அறிவுறுத்தியுள்ளார். கிழக்கு ஆசிய நாடான கம்போடியா மீது ஆயுதங்கள் தொடர்பான தடையை அமெரிக்கா போட்டியிருப்பதே இதற்குக் காரணமாகும். கிழக்கு ஆசிய நாடு களை அச்சுறுத்த, ராணுவப் பயிற்சி நடத்தி வந்த தளத்தை கம்போடியா அழித்துவிட்டதால் தடை விதிக்கப்பட்டது.
மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஆட்சியைக் கவிழ்த்துவிட்டு, பிப்ரவரி 1, 2021 அன்று தனது ஆட்சியை மியான்மர் ராணுவம் அமைத்துக் கொண்டது. அதற்கு எதிராகக் குரல் கொடுப்பவர்களை சிறைப் படுத்தும் பணியை ராணுவம் செய்தது. இந்தப் பணியால் ஆயிரக்கணக் கான ராணுவ வீரர்கள் அதிருப்தி அடைந்திருப்பதாகவும், பலர் ராணு வத்திலிருந்து வெளியேறியிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.