tamilnadu

img

சிஐடியு சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கம் தெருமுனை பிரச்சாரம்

சிஐடியு சாலை போக்குவரத்து தொழிலாளர்  சங்கம் தெருமுனை பிரச்சாரம்

திருச்சிராப்பள்ளி, ஜூலை 1-  ஆன்லைன் அபராதத்தை கைவிட வேண்டும். சுங்க கட்டண உயர்வு மற்றும் இன்சூரன்ஸ் கட்டண உயர்வை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூலை 9 அன்று நடைபெற உள்ள வேலை நிறுத்த, மறியலை விளக்கி சிஐடியு சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கம் சார்பில் செவ்வாய் அன்று திருச்சி ஜங்ஷன் காதி கிராப்ட் முன்பு தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.  பிரச்சாரத்திற்கு அந்தோணி சுரேஷ் தலைமை தாங்கினார். சிஐடியு மாவட்டச் செயலாளர் ரெங்கராஜன், மாவட்ட தலைவர் சீனிவாசன், சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்க தலைவர் சுரேஷ், செயலாளர் சந்திரன் ஆகியோர் பேசினர்.  இதில், ஜங்ஷன் பகுதி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக சாலை போக்குவரத்து தொழிலாளர்கள் மறியல் போராட்டத்தில் பங்கேறது என முடிவெடுக்கப்பட்டது. கோரிக்கைகள் குறித்த துண்டு பிரசுரம் பொதுமக்களிடம் வழங்கப்பட்டது.