tamilnadu

img

ஊராட்சி ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்கக் கோரி சிஐடியு ஆர்ப்பாட்டம்

ஊராட்சி ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம்  வழங்கக் கோரி சிஐடியு ஆர்ப்பாட்டம்

மதுரை, அக்.10- மதுரை மாவட்டத்தில் கிராம ஊராட்சி அனைத்துப் பிரிவு ஊழியர்களுக்கும் அரசாணைப்படி குறைந்த பட்ச ஊதியம் வழங்கக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கும் போராட்டம் வெள்ளியன்று சிஐடியு - மதுரை மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அலுவ லகம் அருகே உள்ள திரு வள்ளுவர் சிலை முன்பு நடை பெற்ற போராட்டத்திற்கு மாவட்டத் தலைவர் ஏ. தெய் வம் தலைமை வகித்தார். மாவட்ட பொதுச் செயலாளர் பொன். கிருஷ்ணன் கோ ரிக்கைகளை விளக்கிப் பேசினார். சிஐடியு புறநகர் மாவட்டத் தலைவர் கே. அரவிந்தன் துவக்க உரை யாற்றினார். சிபிஎம் மாநி லக்குழு உறுப்பினர் எஸ். பாலா, சிஐடியு மாவட்டச் செயலாளர் காளிராஜன், துணைச் செயலாளர்கள் கே. ஜீவானந்தம், பி. பொன் ராஜ் உள்ளிட்ட தோழமை அமைப்புகளின் நிர்வாகிகள் ஆதரித்துப் பேசினர். சிஐடியு மாவட்டப் பொரு ளாளர் சொ. பாண்டியன் நிறைவுரையாற்றினார். சங் கத்தின் மாவட்டப் பொரு ளாளர் நல். மூர்த்தி,துணைத் தலைவர் ஏ. பாண்டி  உள்பட 700-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்து கொண்டனர். தூய்மை காவலர்களு க்கு பணிப்பதிவேடு (SR)  அமைத்து ஊராட்சி நிர்வா கமே நேரடியாக ஊதியம் வழங்க வேண்டும், நிய மிக்கப்பட்ட தொழிலாளர்க ளுக்கும் எஸ்ஆர் (SR) பதிவு செய்ய வேண்டும். அனைத்து ஊராட்சி ஊழி யர்களுக்கும் பணிக் கொடை ஓய்வூதியம் வழங்க வேண்டும். மேலும் ஒரு மாதச் சம்பளத்திற்குச் சம மான தீபாவளி போனஸ் வழங்க வேண்டும் என்ற  கோ ரிக்கைகள் அடங்கிய மனு வை  மாவட்ட ஆட்சியரிடம் சங்கத் தலைவர்கள் வழங்கி னர்.