tamilnadu

செங்கல்பட்டு எஸ்.பி. மீது நடவடிக்கை எடுக்க சிஐடியு வலியுறுத்தல்

பாக்ஸ்கான் ஆலை போராட்டத்தில் கைது செய்யப்பட்ட தொழிலாளர்கள் - சங்க நிர்வாகிகளை விடுதலை செய்திடுக!

சென்னை,டிச.19-  பாக்ஸ்கான் ஆலை போராட்டத்தில்  கைது செய்யப்பட்ட தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகளை தமி ழக அரசு விடுதலை செய்ய வேண்டும் என்று சிஐடியு வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக சிஐடியு மாநிலப் பொதுச்செயலாளர் ஜி.சுகுமாறன், மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் ஆகி யோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது : காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஸ்ரீபெரும்பதூர், சுங்குவார்சத்திரம், ஒரக்கடம், படப்பை உள்ளிட்ட பகுதி களில் இயங்கி வரும் பன்னாட்டு நிறு வனங்களில் பணிபுரியும் தொழி லாளர்களில் பெரும்பாலானோர் வெளி  மாவட்டங்கள், வெளி மாநிலங்களை  சேர்ந்தவர்கள். இவர்கள் நிறுவனங் களை சுற்றியுள்ள தங்கும் விடுதிகளில் தங்கி பணிக்கு சென்று வருகின்றனர். இந்த விடுதிகளில் கழிப்பறை, குளியல் அறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முறையாக ஏற்படுத்தவில்லை.

இரு வர் தங்கக்கூடிய அறையில் பத்துக்கும் மேற்பட்டோரை தங்க வைக்கும் கொடு மையும், தரமற்ற உணவுகள் வழங்கப்படுவதாக புகார்கள் உள்ளன.  இந்த நிலையில் கடந்த சில நாட் களுக்கு முன்பு பாக்ஸ்கான் என்ற  செல்போன் தயாரிப்பு நிறுவனத்தில் பணிபுரியும் பெண் தொழிலாளர்கள் தங்கியுள்ள விடுதியில் பரிமாறப்பட்ட உணவை உட்கொண்ட போது, சில ருக்கு வாந்தி, பேதி, வயிற்றுப் போக்கு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர்கள் மருத்துவமனைகளில் அனு மதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப் பட்டுள்ளது.  இதில் ஒரு தொழிலாளி உயிரிழந்து விட்டதாக  17.12.2021 அன்று இரவு தகவல் பரவியதை தொடர்ந்து தொழி லாளர்கள் மத்தியில் கடும் கோபம் ஏற் பட்டு பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை யில் சாலை மறியலில் ஈடுபட்டனர். 18.12.2021 அன்று காலை வரை போராட் டம் நீடித்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட சிஐடியு  செயலாளர் இ.முத்து குமார் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு இத்தகவல் கிடைத்தவுடன் போராடும் தொழிலாளருக்கு ஆதரவு தெரிவிக்க நேரில் சென்றுள்ளனர்.

அப்போது அங்கிருந்த மாவட்ட ஆட்சியருடன் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு ஏற்பட்டு தொழிலாளர்கள் கலைந்து சென்றுவிட்டனர்.  அதே நேரத்தில் ஒரக்கடத்தில் ஒரு பகுதி தொழிலாளர்கள் சாலை மறிய லில் ஈடுபட்டுள்ள செய்தி  அறிந்து  சிஐடியு  நிர்வாகிகள்  தொழிலாளர்களை அமைதிப்படுத்த சென்றுள்ளனர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த  செங்கல்பட்டு மாவட்ட கண்காணிப்பா ளர்  தலைமையிலான காவல்துறை யினர் போராட்டத்தில் ஈடுபட்ட பெண் தொழிலாளர்களிடம் காவல்துறை அத்துமீறலில் ஈடுபட்டு கண்மூடித்தன மான தாக்குதலை நடத்தியுள்ளனர். இத னை எதிர்த்து கேள்வி கேட்ட இ.முத்து குமார், பகத்சிங்தாஸ் உள்ளிட்ட 7  சிஐடியு நிர்வாகிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு கைது செய்து காவல்நிலை யத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். 18.12.2021 நள்ளிரவில் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவ லில் காஞ்சிபுரம் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த பதற்ற மான சூழ்நிலையை பொறுப்புடன் கையாள வேண்டிய செங்கல்பட்டு காவல் கண்காணிப்பாளர் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகப்படுத்தி தொழிலாளர்களை தாக்குவது, கைது செய்வது போன்ற நடவடிக்கை யால் பிரச்சனையை பெரிதுப்படுத்தி யுள்ளார்.  

இப்பிரச்சனையில் சம்பந்தப் பட்ட நிர்வாகம் பாதிக்கப்பட்ட தொழி லாளருக்கு ஆதரவாக, மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் உடல் நிலை குறித்தான விவரங்களை முறையாக தொழிலாளர்கள் மத்தி யில் தெரிவிக்காமல் பொறுப்பை தட்டி கழித்ததன் விளைவாகவே தொழி லாளர்கள் தங்களது உணர்வுகளை வெளிப்படுத்த ஒன்றுகூடி போராட்ட த்தில் ஈடுபட்டனர் என்பதை தமிழக அர சின் கவனத்திற்கு கொண்டுவருகிறோம். பஞ்சாலைகளில் உள்ளது போன்று கேம்ப் கூலி முறையில் நிறுவனங்கள் பெண் தொழிலாளர்களை கொத்தடிமை களாக நடத்துவதும்,  அந்த பகுதி களில் புற்றீசல் போல் ஆங்காங்கே உரு வாக்கப்பட்டுள்ள தனியார் தங்கும் விடுதிகள் அரசின் வழிகாட்டுதல், விதிகளின் படி செயல்படுவதை கண்கா ணிக்க வேண்டிய மாவட்ட நிர்வாகத்தின் அலட்சியமும் பிரச்சனையை வேறு திசைக்கு செல்வதற்கு காரணமாகி யுள்ளது.  தமிழக அரசு  இந்த பகுதியில் தொழி லமைதியை நிலைநாட்டும் விதமாக கைது செய்யப்பட்ட தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் தொழிலாளர்களை விடுதலை செய்திட வேண்டுமெனவும் அவர்கள் மீதான வழக்குகளை திரும்பப் பெற வேண்டுமெனவும், தொழிலாளர் மீது தாக்குதல் நடத்திய  செங்கல்பட்டு காவல் கண்காணிப்பா ளர் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.   இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.

;