ஆதிதிராவிடர் குடியிருப்பு வீதிகளுக்கு அனுமதிக்க முடியாது என அட்டூழியம் கோவில் தேரை தீ வைத்து எரித்த சாதி வெறியர்கள்
சென்னை, செப்.7 - காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் வட்டம், புத்தகரம் கிராமத்தில் அமைந்துள்ள முத்து கொளக்கியம்மன் கோவிலுக்காக 40 ஆண்டுகளுக்குப் பின் இந்து சமய அறநிலையத் துறையினால் ரூ.28.40 லட்சம் செலவில் புதிய தேர் செய்யப்பட்டு, 5.9.2025 அன்று தேரோட்டம் நடைபெற இருந்தது. ஆனால் ஆதிதிராவிடர் குடியிருப்பு வீதி களில் தேர் செல்வதற்கு அனுமதிக்க முடி யாது என சாதி ஆதிக்க சக்திகள், தீண்டா மையை வெளிப்படுத்தினர். இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்றத் தில் அ.செல்வராஜ் தொடர்ந்த வழக்கில் 4.9.2025 அன்று ஆதிதிராவிடர் மக்களின் வழி பாட்டு உரிமையை மறுக்க முடியாது என்றும், தேரோட்டம் குறித்து ஆய்வு செய்து வருகிற 15.9.2025 ஆம் தேதிக்குள் நீதிமன்றத் தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அட்டூழியம் ஆனால், 6.9.2025 அன்று இரவு மர்ம நபர்கள் கோவில் தேரை தீ வைத்து எரித்து உள்ளனர். இச்சம்பவம் சாதிய உணர் வோடு திட்டமிட்ட வன்கொடுமை செயலா கும். எனவே, குற்றவாளிகளுக்கு எதிராக எஸ்.சி./எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத் தின் கீழ் வழக்குப் பதிந்து, கைது செய்ய வலியுறுத்தி தீண்டாமை ஒழிப்பு முன்னணி யின் மாநில பொதுச் செயலாளர் பி.சுகந்தி, மாவட்டக் காவல்துறை கண்காணிப்பா ளரை சந்தித்து புகார் மனு அளித்தார். மேலும், ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதிகளுக்கு உரிய காவல் பாதுகாப்பு வழங்கிடுமாறும், கோவில் தேர் பவனியை ஆதிதிராவிடர் பகுதியிலும் நடைபெறச் செய்திட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாவட்டச் செயலாளர் கே.நேரு, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.சவுந்தரி, வட்டச் செயலாளர் எஸ்.பழனி, விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் சாரங்கன், மருத்துவ பிரதிநிதி சங்க தலை வர் சுரேஷ் ஆகியோர் உடனிருந்தனர். எஸ்.பி.யை சந்தித்த பின்னர், தீண் டாமை ஒழிப்பு முன்னணியினர் புத்தகரம் கிராமத்தில் எரிக்கப்பட்ட தேரை பார்வை யிட்டு இருதரப்பு மக்களையும் தடைகளை மீறி சந்தித்து, நடந்த விபரங்களைக் கேட்ட றிந்தனர். பாதிக்கப்பட்ட பட்டியல் சமூக மக்களை சந்தித்து ஆறுதல் கூறினர். தேர் பட்டியலின மக்களின் தெருவில் வருவதை உறுதிசெய்யும் வரை தங்களோடு உறு துணையாக நிற்போம் என உறுதியளித்த னர். தீஒமு மாநிலச் செயலாளர் கா.வேணி, மாவட்டப் பொருளாளர் இ.சங்கர், மலை வாழ் மக்கள் சங்க மாவட்டச் செயலாளர் முருகேசன், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கோகுல்பாரதி, உதயகுமார், சூர்யபாரதி, மாணவர் சங்கத்தின் மாவட்டச் செயலா ளர் எங்கெல்ஸ், விவசாயிகள் சங்கத்தின் மாவட்டக் குழு உறுப்பினர்கள் ஆனந்த குமார், மகேந்திரன், மாதர் சங்கத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தேவி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.