tamilnadu

img

சாதியக் கொடுமைகள் - சாதிய அணிச்சேர்க்கையை எதிர்த்து போராட்டங்களை முன்னெடுப்போம்!

சாதியக் கொடுமைகள் - சாதிய அணிச்சேர்க்கையை எதிர்த்து போராட்டங்களை முன்னெடுப்போம்!

தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில மாநாட்டில் கே.பாலகிருஷ்ணன் பேச்சு 

மயிலாடுதுறை, செப்.3-  தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் 5 ஆவது மாநில மாநாடு  மயிலாடுதுறையில் ஆகஸ்ட் 31,  செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் நடை பெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் உரையாற்றினார்.  அவரது உரையின் அம்சங்கள் வருமாறு:  பட்டியலின மக்களுக்காக பல்வேறு களப்போராட்டங்களை நடத்தி  தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி பிரமிப்பூட்டும் பணிகளைச் செய்துள்ளது. தீண்டாமைக் கொடு மையால் பாதிக்கப்பட்டு, அதனை எதிர்த்துப் போராடிய மக்கள் மற்றும்  அவர்களுக்கு ஆதரவாக நின்ற சமூகச்  செயற்பாட்டாளர்கள், வாதாடிய வழக் கறிஞர்களுக்கு இந்த மாநாட்டில் நடத்தப்பட்ட பாராட்டு விழா உணர்ச்சிப் பூர்வமாக இருந்தது. மாநாட்டு  அரங்கில் மைக்செட் தொழிலாளி  கூட கண்கலங்கி இருந்ததை பார்க்க  முடிந்தது. வேதனைப்பட்ட மக்க ளுக்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணி யினர் பக்கபலமாக இருந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களையும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி போராளி யாக மாற்றி, இந்த மாநாட்டில் பங்கேற்க வைத்துள்ளனர். தீண்டாமைக் கொடுமையால் பாதிக்கப்பட்டு பரிதவித்து நிற்பவர் கள், எந்த அரசியல் செல்வாக்கும் பொருளாதார பிடிமானமும் இல்லாத அடித்தள மக்களுக்காக போராடி, பெற்றிருக்கும் வெற்றி, எதற்கும் ஈடா காது. அவர்களுக்கு வாழ வைக்கும்  உரிமையை பெற்றுக் கொடுத்தி ருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது. பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாக்கப் படும் பட்டியலின மக்கள், ஒட்டு மொத்த அரசியல் இயக்கங்களால் ஆதரிக்கப்படாமல் கைவிடப்பட் டுள்ள அந்த மக்களுக்காக களம் பல  கண்டு வெற்றியடைந்துள்ள தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் செயல்வீரர்களை பாராட்டுகிறேன். சமூகத்தின் கடைக்கோடியில் ஒருவர் பாதிக்கப்பட்டாலும் ஓடோடிச் சென்று உதவக்கூடிய இயக்கமாக வளர்த்துள்ள சாமுவேல்ராஜ் மற்றும் முன்னணியினரை வாழ்த்துகிறேன்.  பெருமைமிகு கம்யூனிஸ்ட் இயக்கம் முன்னணி என்று சொன்னால் அது தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு  முன்னணிதான் என்று முத்திரை பதித் துள்ளது. அடித்தட்டு மக்களுக்காக குரல் கொடுக்கும் தீண்டாமை ஒழிப்பு  முன்னணிக்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி எப்போதும் துணை  நிற்கும். பட்டியலின மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து, போராடும் இயக்கம் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி என்பதை பெருமையோடு குறிப்பிட விரும்புகிறேன். 1920 ஆம் ஆண்டுகளில் துவங்கி தற்போது வரை இந்தியா முழுவதும் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக இருந்துள்ள இயக்கம் கம்யூ னிஸ்ட் இயக்கம் என்பதை எவராலும்  மறுதலிக்க முடியாது. கீழத் தஞ்சை மாவட்டத்தில் பண்ணையார்கள், நிலப் பிரபுக்களின் சாணிப்பால் சவுக்கடி கொடுமைக்கு உள்ளாகிய ஒடுக்கப் பட்ட மக்களை தட்டியெழுப்பி, அக் கொடுமைக்கு முடிவு கட்டியது செங்கொடி இயக்கம்.  தென் மாவட்டங்களில் சாதிக் கல வரம் மூண்ட போது, காவல்துறை அத்துமீறி  ஒடுக்கப்பட்ட மக்களைத் தாக்கி அவர்களின் உரிமைகளை பறித்தது. அப்போது, களத்தில் இறங்கிப் போராடி அவர்களுக்கு உரி மைகளைப் பெற்றுத் தந்தது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் அதன் தலைவருமான பி.சம்பத்தும் ஆவர். இருபெரும் போராட்டங்கள் தமிழகத்தை கபளீகரம் செய்ய பாஜக துடிக்கிறது. ஆட்சிக் கட்டிலில் வர்ணாசிரம தர்மத்தை அமர்த்த முயற்சிக்கிறது. இதனை தமிழகம் ஒரு போதும் அனுமதிக்காது. அத்தகைய சக்திகளுக்கு எதிராக களப் போராட் டங்களையும் தத்துவார்த்தப் போராட் டங்களையும் நடத்த வேண்டியுள்ளது. பட்டியலின மக்களையும் பிரித்து வைக்கும் சதிவேலைகளை சிலர் செய் கிறார்கள். ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத் துகின்ற, சமூக விரோதக் காரியங் களுக்கு பயன்படுகின்ற சாதியத்தை  எதிர்த்து, சாதிய அணிச்சேர்க்கையை எதிர்த்து கிராமம் கிராமமாக வலுவான போராட்டங்களை முன்னெடுக்க வேண்டியுள்ளது. அதேநேரத்தில் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிரான போராட்டங்களையும் முன் னெடுக்க வேண்டும். பொருளா தார ஏற்றத்தாழ்வுகளை ஒழித்து,  சமத்துவ நிலையை உருவாக்கு கின்ற போராட்டத்தோடு அது இணை கின்றபோது தான் இந்த போராட்டம் வெற்றி பெறும். விரிவான ஒற்றுமையை உருவாக்குவோம்! பட்டியலின மக்களை தீண்டாமைக் கொடுமைக்கு ஆட்படுத்துகிற இதர  சாதிகளைச் சேர்ந்தவர்கள் மத்தியில்  நற்சிந்தனையை உருவாக்குகிற முறையிலே நாம் பிரச்சாரம் மேற் கொள்ள வேண்டும். தீண்டாமைக் கொடுமைக்கு உள்ளாகிற மக்களைத் திரட்டி போராடுகிற அதே நேரத்தில், இடைநிலை சாதியினரிடம் வலுவான கருத்துப் பிரச்சாரத்தை நடத்த வேண்டும். நாம் நடத்துகிற கருத்துப் பிரச்சாரம் இடைநிலை சாதியினர் மத்தியில் நிச்சயமாக சமூக சிந்த னையை ஏற்படுத்தும். பல்வேறு அமைப் புகள் இடம்பெறுகிற விரிவான ஒற்று மையை உருவாக்கி தமிழகத்தில் தீண்டாமைக்கு இடமில்லை என்பதை ஏற்படுத்துவோம். பாதிக்கப்பட்ட மக்கள் யாராக இருந்தாலும் அவர் களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் இயக்கமாக, வரக்கூடிய காலத்தில் புதிய வரலாறு படைக்கும் இயக்கமாக தீண்டாமை ஒழிப்பு முன்னணி திகழும். இவ்வாறு அவர் பேசினார். மு.வீரபாண்டியன் முன்னதாக, ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் மு.வீரபாண்டியன் வாழ்த்திப் பேசு கையில், ஒத்தக்கருத்துடைய இயக்கங் களை ஒருங்கிணைத்து களமாடும் தீண்டாமை ஒழிப்பு முன்னணியை பல்வேறு தரப்பினரும் பாராட்டு கிறார்கள். இந்திய சமூக அமைப்பு டன் இடதுசாரிகள் உடன்படவில்லை. சாதி பேதங்களை வீழ்த்த இயங்கி யல் அணுகுமுறை தேவை. ஒட்டு மொத்த உழைக்கும் மக்களின் விடு தலையில்தான் ஒடுக்கப்பட்ட மக்க ளின் விடுதலை இருக்கிறது.உங்கள் கொள்கை போராட்டம் வெல்லும் என்று கூறினார்.