tamilnadu

img

சிபிஎம் கரூர் ஒன்றியச் செயலாளராக சி.முருகேசன் தேர்வு

சிபிஎம் கரூர் ஒன்றியச்  செயலாளராக  சி.முருகேசன் தேர்வு

கரூர், ஜூலை 9-  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் ஒன்றியக் குழு சார்பில், சிறப்பு பேரவைக் கூட்டம் கட்சியின் ஒன்றியக் குழு அலுவலகத்தில் ஜூலை 6 அன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக் குழு உறுப்பினர் அ.காதர்பாட்ஷா தலைமை வகித்தார். மாநிலக் குழு உறுப்பினர் எஸ். பாலா, மாவட்டச் செயலாளர் மா. ஜோதிபாசு, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி. ஜீவானந்தம் ஆகியோர் உரையாற்றினர். இதில் மாவட்டக் குழு, ஒன்றியக் குழு உறுப்பினர்கள், கட்சி கிளைச் செயலாளர்கள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில், கட்சியின் கரூர் ஒன்றிய புதிய செயலாளராக சி. முருகேசன் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.