tamilnadu

தீக்கதிர் முக்கிய செய்திகள்

நாளை திமுக எம்.பி., எம்.எல்.ஏ-க்கள் கூட்டம்  

சென்னை: திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கட்சி தலைவர் மு.க.ஸ்டா லின் தலைமையில், திமுக மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம், செப்.23 (செவ்வாய்க்கிழமை) காலை  10 மணிக்கு, சென்னை, அண்ணா அறிவாலயம், முரசொலி  மாறன் வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கத்தில் நடைபெறும்.  இதில் மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் அனை வரும் தவறாது கலந்து கொள்ள வேண்டும்” என்று தெரி வித்துள்ளார்.

பாஜக தலையிடாதாம்!

சேலம்: சேலத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி  பழனிசாமியை சந்தித்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த  பாஜக தமிழ்நாடு மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனி டம், பாமக உட்கட்சி விவகாரம் குறித்து எழுப்பிய கேள்விக்கு  பதில் அளிக்கையில், “எந்த கட்சியின் உட்கட்சி விவகாரங்களி லும் பாஜக தலையிடாது” என்று தெரிவித்துள்ளார்.

‘நிபந்தனையை ஏற்றால்தான் நிதி’

சென்னை: “ஒன்றிய அரசின் ஒப்பந்தத்தை ஏற்றால் தான் சமக்ர சிக்சா கல்வி நிதியை வழங்க முடியும்” என்று  ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் மீண்டும் தெரிவித் துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய  அவர், “கல்வி நிதி குறித்து தமிழகத்திலும் நாடாளுமன்றத்தி லும் பேசி வருகிறேன். தமிழக அரசு, அரசியல் செய்யாமல்  மாணவர்களின் நலனுக்கு முக்கியத்துவம் தர வேண்டும்.  தமிழகத்தில் பல மொழிகள் ஏற்கனவே கற்பிக்கப்படு கின்றன. எந்த ஒரு மொழியும் திணிக்கப்படவில்லை. மாண வர்கள் விரும்பினால் வேறு மாநில மொழிகளையும் கற்கலாம். மூன்று மொழி கொள்கையை பல மாநிலங்கள் பின் பற்றுகின்றன. மொழி காரணமாக பிரிவினை ஏற்படுத்திய வர்கள் தோல்வியடைந்துள்ளனர். அரசியல் நிலைப் பாட்டை கல்வியில் திணிக்கக் கூடாது” என்றார்.

எஸ்.வி. சேகர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை: திரைக்கலைஞர் எஸ்.வி.சேகர் வீட்டிற்கு கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெடிகுண்டு மிரட்டல்  விடுக்கப்பட்டது. இதனையடுத்து, வெடிகுண்டு நிபுணர்கள் நடத்திய சோதனையில் அவரது வீட்டில் எந்த வித வெடி குண்டும் கண்டுபிடிக்கப்படவில்லை. எனவே வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என தெரியவந்தது. வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு ஒரு வாரம் கூட ஆகாத நிலையில், தற்போது எஸ்.வி. சேகர் வீட்டிற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. தகவலறிந்த போலீசார் மற்றும்  வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய் உதவியுடன் எஸ்.வி.சேகர் வீட்டில் சோதனை நடத்தினர்.