tamilnadu

தீக்கதிர் முக்கிய செய்திகள்

முதலமைச்சர் வீட்டிற்கு  வெடிகுண்டு மிரட்டல்

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைசுற்றல் காரணமாக கடந்த ஜூலை 21 ஆம் தேதி  சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனும திக்கப்பட்டு ஞாயிறன்று மாலை டிஸ்சார்ஜ் ஆனார். இந்நிலையில், ஞாயிறன்று அதிகாலை மர்ம நபர் ஒரு வர் காவல் கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொண்டு முதலமைச்சர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்  விடுத்துள்ளார். மிரட்டல் விடுத்த தகவலைத் தொடர்ந்து  சென்னை ஆழ்வார்பேட்டை கோட்டூர்புரத்தில் உள்ள  முதலமைச்சரின் வீட்டிற்கு பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டுள்ளது. பிரதமர் மோடி இரண்டு நாள் தமிழ்நாடு பய ணத்தில் இருக்கும் நிலையில், இச்சம்பவம் காவல்துறை யினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவி தற்கொலை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட திருக்காலிமேடு காமராஜர் தெருவைச் சேர்ந்த முகமது  சாதிக் (55) என்ற ஆட்டோ ஓட்டுநரின் 18 வயது மகள்,  நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற போதிலும் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்காத அச்சத்தில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். சின்ன காஞ்சிபுரத்தில் உள்ள அரசுப் பள்ளியில் 12  ஆம் வகுப்பு படித்த இவர் நீட் தேர்வில் 502 மதிப்பெண்  பெற்றிருந்தார். மருத்துவப் படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில், அரசு ஒதுக்கீட்டில்  மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்குமா என்ற அச்சத் தில் மன உளைச்சலில் இருந்த மாணவி வீட்டில் தொழுகை செய்வதாக கூறிவிட்டு அறையில் இருந்த மின் விசிறியில் தூக்கிட்டு உயிரிழந்துள்ளார். காஞ்சிபுரம் தாலுகா போலீசார் மாணவியின் உடலை  கைப்பற்றி உடற்கூராய்வுக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து வழக்குப் பதிந்து தீவிர விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.

‘என்டிஏ கூட்டணி ஆபத்தானது’

சென்னை: பாஜக கூட்டணியில் வளரக்கூடிய எந்த  கூட்டணியும் தமிழ்நாட்டுக்கு நன்மை தராது என்ப தால் தேசிய ஜனநாயக கூட்டணி தமிழ்நாட்டுக்கு ஆபத் தான கூட்டணி என்றும், “தன்னை மதிக்காத கூட்டணி யில் இருந்து ஓ. பன்னீர்செல்வம் வெளியேற வேண்டும்.  ‘மதியாதார் வாசல் மிதிக்க மாட்டேன்’ என கும்பிடு போட்டுவிட்டு வெளியே வருவதுதான் நிம்மதி” என்றும்  ஓபிஎஸ் அரசியல் ஆலோசகர் பண்ருட்டி எஸ்.ராமச் சந்திரன் அறிவுரை வழங்கியுள்ளார்.

தெரு நாய்களை கருணைக் கொலை செய்ய அரசு அனுமதி

சென்னை: அதிகப்படியான காயங்களுடன் நோய் வாய்ப்பட்டு சிரமப்படும் தெரு நாய்களை கருணைக் கொலை செய்யலாம் என்று தமிழ்நாடு அரசு அனுமதி  வழங்கியுள்ளது. தெரு நாய்களால் ரேபிஸ் உள்ளிட்ட நோய் பாதிப்புகள் ஏற்படும் நிலையில் கால்நடைத் துறை  இது குறித்த அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் தெரு நாய்களின் தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் கடும்  அவதிக்குள்ளாகியுள்ளனர். குறிப்பாக குழந்தைகள்  மற்றும் சிறுவர்கள் அதிகப்படியான நாய்க்கடியால்  பாதிக்கப்பட்டுள்ளனர். நாய்க்கடி மட்டுமல்லாமல் தெரு நாய் தொல்லையால் சாலை விபத்துகளும் ஏற்படு கின்றன. கடந்த ஓராண்டில் மட்டும் லட்சக்கணக்கான மக்கள் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இத னால் மனிதர்களிடையே ரேபிஸ் நோய் தொற்று அதிக மாகி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அரசாணையின்படி பதிவு செய்யப்பட்ட கால்நடை மருத்துவர்கள் மூலம் தெரு நாய்களை கருணைக் கொலை செய்ய வேண்டும். கருணைக் கொலை செய்யப் படும் நாய்கள் குறித்த ஆவணங்கள் முறையாக பராமரிக் கப்பட வேண்டும். மேலும் கருணைக் கொலை செய்யப் படும் தெரு நாய்கள் சரியான முறையில் அடக்கம் செய்யப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகுதி எனக்கு இல்லையா?

சென்னை: “அரசிய லுக்கு வந்தவர்கள் எல்லாம், ‘என்னை முதல மைச்சர் ஆக்குங்கள்’ என மக்களிடம் கேட்கிறார் கள்; நான் 25 ஆண்டுகள் தேர்தல் அரசியலில் இருக்கிறேன். முதல மைச்சர் ஆகும் தகுதி எனக்கு இல்லையா?” என தொண்டர்களை நோக்கி திருமாவளவன் கேள்வி எழுப்பினார்.

கஞ்சா சாக்லேட் பறிமுதல்  

சென்னை: கூடு வாஞ்சேரி அருகே எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக மாணவர்கள் தங்கி யுள்ள வீடுகளில் காவல் துறையினர் திடீர்  சோதனை மேற்கொண்ட னர். அப்போது, 5200-க்கும் மேற்பட்ட கஞ்சா சாக்லேட்கள், குட்கா, பான் மசாலா உள்ளிட்ட போதைப் பொருட்களை தாம்பரம் காவல்துறை ஆணையர் பவன் குமார்  தலைமையிலான காவ லர்கள் பறிமுதல் செய்த னர். நூற்றுக்கும் மேற் பட்ட காவலர்கள் இந்த  சோதனையில் ஈடுபட்ட னர் என்று தமிழ்நாடு அரசு வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில் தெரி விக்க ப்பட்டுள்ளது.

ஒரே சிரிப்புத்தான்!

திருச்சி: இரண்டு நாள்  பயணமாக தமிழ்நாட் டிற்கு வருகை தந்த பிரத மர் நரேந்திர மோடியை திருச்சி விமான நிலையத் தில் சந்தித்த அதிமுக பொதுச் செயலாளர் எடப் பாடி பழனிச்சாமி பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “பிர தமர் மோடிக்கு சிரித்த முகத்துடன் நாங்கள் வர வேற்பு கொடுத்தோம். அவரும் எங்களுக்கு நல்ல  மரியாதை கொடுத்தார்” என்றார்.

நீர்வரத்து அதிகரிப்பு

கிருஷ்ணகிரி: தென் மேற்கு பருவமழை கார ணமாக கேரள மாநிலம் வயநாடு மற்றும் கர்நாடக  மாநில காவிரி நீர்ப்பிடிப்பு  பகுதிகளில் விட்டு விட்டு  கனமழை பெய்து வரு கிறது. இதனால் கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இதனால், ஒகே னக்கல் காவிரி ஆற்றில்  நீர்வரத்து அதிகரித்து வருவதால், ஆற்றில் குளிக்கவும், பரிசல் இயக் கவும் தடை விதிக்கப் பட்டுள்ளது.