வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
புதுக்கோட்டை, ஜூலை 9- நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்தையொட்டி, புதுக்கோட்டையில் அனைத்து வங்கி ஊழியர் சங்கங்களின் சார்பில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை தெற்கு 4 ஆம் வீதியிலுள்ள இந்தியன் வங்கி அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, புதுக்கோட்டை மாவட்ட வங்கி ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் கே.என். ராஜேந்திரன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் கே. சிவானந்தம், பாரத ஸ்டேட் வங்கி ஊழியர் சங்கத்தின் உதவிப் பொதுச்செயலாளர் பாண்டியன், இந்திய வங்கி ஊழியர் சங்கத்தி்ன் அமைப்புச் செயலாளர் ஏ. கார்த்திகேயன், கூட்டுறவு வங்கி ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் அருணாசலம் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.