ஆட்டோ சங்க மகாசபைக் கூட்டம்
நாமக்கல், ஜூலை 26- வெப்படை நேதாஜி பயணிகள் ஆட்டோ சங்க மகா சபைக் கூட்டத்தில் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். நாமக்கல் மாவட்டம், வெப்படை சிஐடியு நேதாஜி பயணி கள் ஆட்டோ ஸ்டாண்ட் சங்கத்தின் 2 ஆம் ஆண்டு மகாசபைக் கூட்டம் சனியன்று, வெப்படையில் வி.பி.சிந்தன் நினைவ கத்தில் நடைபெற்றது. சங்கத்தின் தலைவர் எஸ்.தனபால் தலைமை வகித்தார். செயலாளர் என்.மெய்நாதன் அறிக் கையை முன்வைத்தார். இக்கூட்டத்தில், ரத்த தானம் செய்த தொழிலாளர்கள் கௌரவிக்கப்பட்டனர். இதில், சங்கத்தின் தலைவராக எஸ்.தனபால், செயலாளராக என்.மெய்நாதன், பொருளாளராக எஸ்.ஆனந்தராஜ் உள்ளிட்ட கமிட்டி உறுப்பி னர்கள் தேர்வு செய்யப்பட்டனர். முடிவில், மாவட்டச் செயலா ளர் பி.தண்டபாணி நிறைவுரையாற்றினார்.
ஓய்வூதியர் சங்க மாநாடு
கோவை, ஜூலை 26- அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க பேரூர் வட்டக் கிளை மாநாட்டில் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். தமிழ்நாடு அரசு அனைத்துறை ஓய்வூதியர் சங்க பேரூர் வட்டக் கிளை 5 ஆவது மாநாடு அண்மையில், வடவள்ளி காமாட் சியம்மன் கோவில் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. வட்ட கிளைத் தலைவர் எம்.குப்புராஜ் தலைமை வகித்தார். செயலாளர் ஆர்.முத்துசாமி வேலை அறிக்கையும், பொருளா ளர் எம்.கந்தசாமி வரவு செலவு அறிக்கை முன்வைத்தனர். மாநாட்டில் 10 ஆம் வகுப்பில் 500க்கு 471 மதிப்பென் வாங்கிய வீரகேரளம் கீர்த்தனாவுக்கு நினைவுப்பரிசினை மாநில துணைத்தலைவர் என்.அரங்கநாதன் வழங்கி சிறப்புரையாற் றினார். இதில் தலைவராக எம்.குப்புராஜ், செயலாளராக இளங்கோ, பொருளாளராக ஆர்.முத்துசாமி உள்ளிட்ட 11 பேர் தேர்வு செய்யப்பட்டனர். வி.விஜயலட்சமி நன்றி கூறினார்.
ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி மனு
ஈரோடு, ஜூலை 26– அந்தியூர் அருகே வண்டிப்பாதை ஆக்கிரமிப்பை அகற்றி பாதை வசதி செய்து கொடுக்க வேண்டுமென வெள்ளியன்று விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் பாதிக்கப்பட்டவர் மனு அளித்தார். அந்தியூர் வட்டம், உமாரெட்டியூர் அருகேயுள்ள அந் தோணி நகரைச் சேர்ந்த செல்வி, இவருக்கு அம்மாபேட்டை கிராமத்தில் சுமார் ஒரு ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. கடந்த 18 ஆண்டுகளாக மானாவாரி விவசாயம் செய்து வரும் நிலத்தை, பக்கத்து நில உரிமையாளர்கள் ஆக்கிர மித்துள்ளனர். ஆக்கிரமிப்பை அகற்றி, நிலத்தை அளவீடு செய்து, அத்துக்கல் நட வேண்டும். வண்டிப்பாதையை மீட்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளார். இதற்காக மூன்று முறை பணம் செலுத்தியும் இதுவரை அளவீட்டுப் பணிகள் நடைபெறவில்லை என்று புகார் தெரிவித்தார். இம்மனு அளிக்கையில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலை வர் எஸ்.வி.மாரிமுத்து உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
அரசுப்பள்ளியில் பவள விழா கொண்டாட்டம்
நாமக்கல், ஜூலை 26- ராசிபுரம் அருகே அரசு மேல்நிலைப் பள்ளியின் 75 ஆம் ஆண்டு பவள விழாவில் முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டு அன்பை பரிமாறிக் கொண்டனர். நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தை அடுத்த தொப்பப்பட்டி, ஜேடர்பாளையம் பகுதியில் கடந்த 1951 முதல் அரசு மேல் நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந் நிலையில், இப்பள்ளியின் 75 ஆம் ஆண்டு பவள விழா வெள்ளியன்று நடைபெற் றது. பள்ளி வளாகத்தில் நிறுவப்பட்ட திரு வள்ளுவர் சிலையை, தொழிலதிபர் ஜெய சீலன், ஏ.கே.மணி மற்றும் பள்ளி ஆசிரியர்கள் முன்னிலையில் பள்ளி மாணவி ஒருவர் திறந்து வைத்தார். இப்பள்ளியில் 1951 ஆம் ஆண்டு முதல் படித்த மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் என பலர் குடும்பத்தினருடன் கலந்து கொண்டு, ஒருவருக்கொருவர் அன்பை பரிமாறி புகைப்படம் எடுத்து மகிழ்ந் தனர். இந்நிகழ்வில் நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் ராமலிங்கம், முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் ராமசாமி, தற்போதைய, முன்னாள் ஐஏஎஸ் அதிகாரிகள் மற்றும் பல் வேறு துறை சார்ந்த அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.