ஆக.5 டாஸ்மாக் ஊழியர்கள் உண்ணாநிலைப் போராட்டம்
சென்னை, ஜூலை 7 - டாஸ்மாக் ஊழியர்களின் கோரிக்கை களை நிறைவேற்ற வலியுறுத்தி ஆக.5 அன்று உண்ணாநிலைப் போராட்டம் நடைபெறும் என்று டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மே ளனம் (சிஐடியு) அறிவித்துள்ளது. டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனக் கூட்டம் சனிக்கிழமை சென்னையில் நடை பெற்றது. சம்மேளனத் தலைவர் பி.முருகன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத் தில், பொதுச் செயலாளர் கே.திருச்செல்வன், பொருளாளர் ஜி.சந்திரன், துணை பொதுச் செயலாளர்கள் ஏ.ஜான் அந்தோணி ராஜ், கே.பி.ராமு உள்ளிட்டோர் கலந்து கொண்ட னர். இந்தக் கூட்டத்தில், ஊழியர்களுக்கு அறி வித்த 2 ஆயிரம் ரூபாய் ஊதிய உயர்வு ஏப்ரல் மாதத்திலிருந்து வழங்கப்பட வில்லை. அரசு உடனடியாக தலையிட்டு ஊதிய உயர்வை நிலுவையுடன் வழங்க வேண்டும். டாஸ்மாக் நிர்வாகத்தின் மேல் முறையீட்டு வழக்குகளை சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்துள்ளது. எனவே, 22 ஆண்டுகளாக பணிபுரியும் ஊழி யர்களை நிரந்தரப்படுத்த வேண்டும். மதுபானங்களுக்கு ரசீது வழங்க கொடுக் கப்பட்ட சாதனங்களின் செயல்பாட்டில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப பிரச்சனை, ஊழியர் பற்றாக்குறையால் ஏற்பட்டுள்ள வேலைப்பளு ஆகியவற்றை கருத்தில் கொண்டு, பணிநிரவல் செய்ய வேண்டும். 8 மணி நேரத்திற்கு மேலான வேலை நேரத்திற்கு மிகைநேர ஊதியம் வழங்க வேண்டும். கேரளாவை போல் ஒவ்வொரு கடையிலும் விற்பனை பிரிவு, பண வசூல் பிரிவை உருவாக்க வேண்டும். காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தில் உள்ள நடைமுறைப் பிரச்சனை களுக்கு தீர்வு காண உயர்நீதிமன்ற உத்தரவுபடி மேலாண்மை இயக்குநர் தலை மையில் குழு அமைக்க வேண்டும். ஆன்-லைன் விற்பனையை அதிகரிக்க இலக்கு வைப்பதை கைவிட வேண்டும். ஆய்வுகளின்போது, ஊழியர்கள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகளில் தொடர்ந்து சட்டப்படியான விசாரணை நடத்தா மலும், பிழைப்பூதியம் வழங்காமலும் மாதக் கணக்கில் தற்காலிக பணி நீக்கத்தில் வைத்தி ருப்பது சட்டத்திற்கும், இயற்கை நியதிக்கும் எதிரானதானது. எனவே நிர்வாகம் உடனடி யாக விசாரணை நடத்தி ஒழுங்கு நடவடிக்கை களை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி ஆகஸ்ட் 5 அன்று சென்னை யில் உண்ணாநிலை அறப்போராட்டம் நடைபெறும் என்று முடிவெடுக்கப்பட்டு உள்ளது.