சென்னை,டிச.20- ஆரம்ப சுகாதார நிலையங்க ளில் ஓய்வு பெற்ற செவிலியர் கள் மற்றும் கொரோனா பணி யில் ஈடுபட்ட செவிலியர்கள் பயன்படுத்த முடிவு செய்யப் பட்டுள்ளது. அவர்களுக்கு ஒருநாள் தொகுப்பூதியமாக ரூ.500 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணியை அரசு தீவிரப்படுத்தி வரு கிறது. இலக்கை அடைய இன்னும் 5 விழுக்காட்டினர் தல் தவணை யும், 40 விழுக்கட்டினர் 2-வது தவணையும் செலுத்த வேண்டிய நிலை உள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள கிராமப்புற, நகர்ப்புற ஆரம்ப சுகா தார நிலையங்களில் தடுப்பூசி போடும் பணி கடந்த சில மாதங்களாக தீவிரப்படுத்தப்பட்ட தால் அங்குள்ள செவிலியர்கள், கிராம செவிலியர்கள் இந்த பணி களில் ஈடுபடுத்தப்பட்டனர். இதனால் மகப்பேறு மருத்துவ சிகிச்சை உள்ளிட்ட பிற மருத்துவ சேவைகள் பாதிக்கப்பட்டன.
இதையடுத்து அவர்களை அந்த பணியில் தொடர்ந்து ஈடுபடுத்த சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளது. தடுப்பூசி போடும் பணிக்காக மட்டும் தற்காலிகமாக நர்சு களை தேர்வு செய்ய முடிவு செய்யப் பட்டது. 2,286 ஆரம்ப சுகாதார நிலைங்களில் 2,286 தற்காலிக செவிலியர்களை நியமிக்க உத்தர விடப்பட்டுள்ளது. இதுகுறித்து பொது சுகாதாரத் துறை இயக்குனர் மருத்துவர் செல்வவிநாயகம் கூறியதாவது:- தடுப்பூசி போடும் பணியில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றக் கூடிய நர்சுகள், கிராம செவிலியர்கள் இதுவரை பயன்படுத்தப்பட்டார்கள். இத னால் மற்ற மருத்துவ சேவை பாதிக்கக்கூடிய நிலை ஏற்பட்ட தால் உடனடியாக தற்காலிக நர்சுகள் தொகுப்பூதியத்தில் நிய மிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஓய்வு பெற்ற செவிலியர் கள் மற்றும் கொரோனா பணி யில் ஈடுபட்ட செவிலியர்கள பயன் படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு ஒருநாள் தொகுப்பூதியமாக ரூ.500 நிர்ணயிக்கப் பட்டுள்ளது. அதன் அடிப்படையில் அவர்களுக்கு பணி செய்யக்கூடிய நாட்களுக்கு ஊதியம் வழங்கப்படும். இதன் மூலம் மகப்பேறு மருத்துவ சேவைகள் பாதிக்கப்படாது. தொடர்ந்து அந்த பணியை செய்யக்கூடிய நர்சுகள் அதில் ஈடுபடுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.