பணி நிரந்தரம் செய்ய கோரி வேட்டை தடுப்பு காவலர்கள் வேலைநிறுத்தம்
தேனி, அக்.3- பணி நிரந்தரம் செய்ய கோரி கம்பம் கிழக்கு வனச் சரகர் அலுவலகத்தின் முன்பு வேட்டை தடுப்பு காவலர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். ஸ்ரீவில்லிபுத்தூர் மேக மலை புலிகள் காப்பகத் திற்கு உட்பட்ட தேனி மாவட் டத்தில் கண்டமனூர், வருஷ நாடு, மேகமலை, சின்ன மனூர், கம்பம் கிழக்கு, கூட லூர் ஆகிய 6 வனச்சரகங்கள் உள்ளன. இச்சரகங்களில் 80க்கும் மேற்பட்ட வேட்டை தடுப்பு காவலர்கள் பணி யாற்றுகின்றனர். வனப்பகுதி யில் ரோந்து செல்வது, வன விலங்கு வேட்டை, மரம் கடத்தல், காட்டுத்தீ உள்ளிட் டவை கண்காணிப்பது, வன விலங்குகள் காயமடைந்து கிடக்கும் போது அதனை மீட்டு சிகிச்சை அளிப்பது, உயிரிழந்த வன விலங்கு களை பிரேத பரிசோத னைக்கு பின் அடக்கம் செ கூது உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் பல்வேறு மாவட்டங்களில் வேட்டை தடுப்பு காவலர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ள தாகவும், அதேபோல் ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகத்தில் பணிபுரிந்து வரும் சுமார் 82க்கும் மேற்பட்டோரை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். தனியார் ஒப்பந் தம் மூலம் சம்பளம் வழங்கு வதை நிறுத்தி விட்டு வழக் கம் போல் வனத்துறை மூலம் சம்பளம் வழங்க வேண்டும் என கோரி கவன ஈர்ப்பு வேலைநிறுத்த போரா ட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற னர். அதன்படி கம்பம் கிழக்கு வனச்சரக அலுவலகத்தில் 17 வேட்டை தடுப்பு காவலர் கள் வேலைநிறுத்த போரா ட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து வேட்டை தடுப்பு காவலர்கள் கூறு கையில், தமிழகத்தில் பல மாவட்டங்களில் எங்களுடன் பணிக்கு சேர்ந்தவர்கள் பணி நிரந்தரம் செய்யப் பட்டுள்ளனர். ஆனால் ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகத்தில் பணியாற்றி வருபவர்களை பணி நிரந்தரம் செய்யாமல் உள்ளனர். வேட்டை தடுப்பு காவலர்களை பணி நிரந்த ரம் செய்ய தமிழக அரசு நட வடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
