பேராவூரணி அருகே குளம் இல்லாத கிராமத்தில் செயற்கையாக உருவாக்கப்பட்ட குளம்
தஞ்சாவூர், அக். 23- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே பழைய நகரம், ஊராட்சிக்குட்பட்ட சீவன்குறிச்சி கிராமம் உள்ளது. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தில் கால்நடை கள் மற்றும் மக்களின் பொது பயன்பாட்டிற்கு ஒரு குளம் உருவாக்க வேண்டும் என கிராம மக்கள் முயற்சி செய்து வந்தனர். இதையடுத்து, அரசு புறம்போக்கு நிலம் ஒன்றைத் தேர்வு செய்து, முறையாக நீர்வளத்துறை மற்றும் வருவாய்துறை அலுவலர்களிடம் குளம் அமைக்க அனுமதி பெற்றனர். பின்னர், பேராவூரணியைச் சேர்ந்த, நீர்நிலைகளை மேம்படுத்தும் மெகா பவுண்டேஷன் அமைப்பின் இயக்குனர் நிமல்ராகவனை அணுகினர். தொடர்ந்து, கடந்த ஆகஸ்ட் மாதம் சமதளமாக இருந்த ஒரு இடத்தைத் தேர்வு செய்து, தூர்வாரும் பணிகளை சட்டப்பேரவை உறுப்பினர் நா.அசோக்குமாரால் துவக்கி வைக்கப்பட்டு பணிகள் முடிக்கப்பட்டன. மேலும், குளத்திற்கு தண்ணீர் கொண்டு வருவதற்கான வாய்க்கால் உருவாக்கப்பட்டது. இந்நிலையில், செயற்கை யாக வெட்டப்பட்ட குளத்திற்கு கிராம மக்கள் ‘சிவசக்தி விநாயகர் குளம்’ என பெயர் வைத்துள்ளனர். இதுகுறித்து நிமல்ரா கவன் கூறுகையில், “எங்கள் அமைப்பின் சார்பில் ஏற்கனவே உள்ள குளங்களை சீரமைத்து வருகிறோம். கிராம மக்களின் வேண்டு கோளின்படி இரண்டு மாதங்களில் சுமார் எட்டு அடி ஆழம் மற்றும் இரண்டு ஏக்கர் பரப்பளவில் குளம் உருவாக்கப்பட்டு, தற்போது அதில் தண்ணீர் வந்துள்ளது” என்றார்.
