tamilnadu

img

மக்களை அச்சுறுத்துவது அமித்ஷாவுக்கு பிடிக்கும்

லண்டன்,மே 18- இங்கிலாந்தில் இருந்து வெளியா கும் கார்டியன் இதழ்  அமித்ஷாவிற்கு மக்களை பயமுறுத்துவது பிடிக்கும் எனவும் மோடியின் வலதுகரமாக உள்ள அவர் இந்தியாவை எவ்வாறு கொண்டு செல்கிறார் எனவும் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது.  அதுல் தேவ்  என்பவர் எழுதி யுள்ள அந்த கட்டுரையில் மிகப்பெரும் தாதாவாக இருந்த சோராபுதீன் மற்றும் அவரது மனைவியை கொலை செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட காவல்துறை அதிகாரிகளுடன் அமித்ஷா தொடர்பில் இருந்தார் எனவும் அவர்களை கடத்தியது முதல் கொலையான நாள்வரை, கொலையில் தொடர்புடைய காவல் அதிகாரி ஒருவருடன்  அமித்ஷா  தொலைபேசியில் தொடர்ந்து உரை யாடலில் இருந்துள்ளார் என சிபிஐ சமர்ப்பித்த குற்றப்பத்திரிகையையும் அந்த கட்டுரையில் குறிப்பிட்டுள்ளது.  

வலதுகரம்,  கண்காணிக்கும் நபர் 

மேலும் அமித்ஷா 40 ஆண்டுகளாக மோடியின் நம்பிக்கைக்குரிய நபராக இருப்பதோடு மோடியின் வலது கரமாகவும் அனைத்தையும் கண்கா ணிக்கும் நபராகவும் உள்ளார்.கட்சி உத்தரவுகளை  அமல்படுத்தும் நபராக வும், அவரது உத்தரவை அமல் படுத்துவதற்காக ராணுவம்  போல அக்கட்சியின் தொண்டர்களும் உள்ளனர். 2014 இல் ஆட்சி அமைத்தவுடன் அவர் மீது இருந்த அனைத்து வழக்குகளையும் அரசியல் உள்நோக்கம் கொண்டது என பாஜக தள்ளுபடி செய்தது. மேலும் தீவிர இந்துத்துவா அமைப்பாக  உள்ள ஆர்எஸ்எஸ் - பாஜகவின் இந்துத்துவா திட்டங்களை விரிவு படுத்தியதிலும், இந்திய அரசியல் சூழலை மாற்றியதிலும் அமித்ஷா வின் பங்கு முக்கியமானது என குறிப்பிட்டுள்ளார்.   மேலும் அரசை விமர்சிக்கும் அனைவரும் அமித்ஷாவின் அரசியல் செல்வாக்கு மூலம் மிரட்டப்படு கின்றனர் என்றும் அவரால் அனை வரும் தொடர்ந்து கண்காணிக்கப் பட்டு வருகின்றனர் என்றும் கார்டியன் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கூட்டணி அமைப்பது, எதிர்க்கட்சி களின் வேட்பாளர்கள், உறுப்பினர்க ளை  விலைக்கு வாங்கி எதிர்க்கட்சி யை பலவீனப்படுத்துவது என தந்திரமாகச்  செயல்படுவதில் அவர் முக்கிய நபராக உள்ளார் எனவும் கூறப்பட்டுள்ளது.

மோடிக்குப்பதில் 

குறிப்பாக இதற்கு இரு உதார ணங்களையும்  அந்த கட்டுரையில் அதுல் தேவ் குறிப்பிட்டுள்ளார். அதா வது கடந்த 10 ஆண்டுகளில் மோடி 2019 ஆம் ஆண்டு மட்டும்  ஒரு முறை  செய்தியாளர் சந்திப்பு நடத்தி யுள்ளார். அதில் அவரை நோக்கி வந்த கேள்விகள் பலவற்றுக்கு பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் அமித்ஷா பக்கம் திருப்பியதையும் அந்த கேள்வி களை அமித்ஷா கையாண்டு பதில் கொடுத்ததையும் குறிப்பிடுகிறார். மற்றொன்று கார்ப்பரேட்டுக ளுக்காக அரசுடன் பேரம் பேசும் நபர் ஒருவர், மத்திய அமைச்சர் ஒருவ ரிடம் அவர்களது கட்சிக்கு நிதி  கொடுத்ததாகவும்,  அப்போது அந்த அமைச்சர் பணத்தில் ஒரு பகுதியை யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள்  என எடுத்து வைத்துக் கொண்டதா கவும்  சிறிது நேரத்திலேயே அமித்ஷா விடம் இருந்து  அழைப்புவர உடனடியாக அந்த பேரம் பேசும் நப ரிடமே பணத்தை கொடுத்து அதையும்  கட்சி வங்கிக்கணக்கில் செலுத்தக் கூறியதாகவும்  பெயர் சொல்ல விரும்பாத ஒருவர் தெரிவித்ததை கட்டுரையில் தேவ் குறிப்பிட்டுள்ளார். 

மனித உரிமை  அமைப்புகளின் கவலை 

2019 ஆம் ஆண்டு இரண்டாவது முறை மோடி ஆட்சிக்கு வந்த பிறகு இந்தியாவின் சூழல் குறித்து சர்வதேச மனித உரிமை அமைப்புகள்,  ஊடகங்கள் உள்ளிட்டவை கவலைப் படத்துவங்கின. இந்தியாவின் அந்த கவலைகளுக்கு காரணமே அமித்ஷா  தான் என்றும் தெரிவித்துள்ளார் கட்டுரையாளர்.  2021 ஆம் ஆண்டு ஒரு பிரபல பத்திரிகை நிறுவனம் அமித்ஷாவுக்கு எதிரான அனைத்து ஆதாரங்களையும் தனது பத்திரிகையின்  முகப்பில் பட்டியலிட்டு இன்னும் இவர் ஏன் சுதந்திரமாக இருகிறார் என கேள்வி கேட்டு இருந்தது. இன்று அவ்வாறு  எந்த பத்திரிகையாவது கேள்வி கேட்க  முடியுமா எனவும் கேள்வி எழுப்பி யுள்ளார்.  இந்தியாவில் பத்திரிகையாளராக இருப்பவரால் ஒரு எல்லைக்கு மேல் பணியாற்ற முடியாது. இதுவரை இந்திய ஊடகங்கள்  சந்திக்காத நெருக்கடியை இன்று சந்திக்கின்றன  எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் சில உச்ச நீதிமன்ற நீதிபதிக ளுக்கே  உச்ச நீதிமன்றத்தில் என்ன நடக்கிறது என தெரிவதில்லை என பதிவு செய்துள்ளார்.


 

 

;