குடிநீருக்கு மாற்று ஏற்பாடு - சிபிஎம் முறையீடு
ஈரோடு, ஆக. 13- சென்னிமலை பகுதியில் நிலத்தடி நீரை குடிநீராகப் பயன் படுத்த தடை விதிக்கப்பட்ட கிராமங்களுக்கு மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலி யுறுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம், சென்னிலை ஒன்றியத்தில் 4 கிராமங் களைச் சேர்ந்த 37 ஊர்களில் தண்ணீரை குடிநீராகப் பயன் படுத்த வேண்டாம் என குடிநீர் வடிகால் வாரியம் தடை விதித் துள்ளது. சிப்காட்டில் செயல்பட்டு வரும் தோல் மற்றும் சாய ஆலைகளிலிருந்து வெளியேற்றப்படும் சுத்திகரிக்கப் படாத கழிவு நீரினால் இந்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, உடனடியாக லாரிகள் மூலம் சம்பந்தப்பட்ட கிராமங்களுக்கு தண்ணீர் வழங்க வேண்டும். அடுத்தகட்ட மாக பைப் லைன் அமைத்து மனிதர்களுக்கு மட்டுமல்லாது ஆடு, மாடுகளுக்கு தண்ணீர் கிடைக்க ஆவண செய்ய வேண் டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பெருந்துறை தாலுகா செயலாளர் ஆர்.அர்ஜுனன் வீட்டுவசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துசாமிக்கு மனு அனுப்பியுள்ளார்.
பெண்ணின் புகைப்படங்களை மார்பிங் செய்து பரப்பியவர் கைது
கோவை, ஆக.13- கோவையை சேர்ந்த பெண்ணின் புகைப்படங்களை மார்ஃபிங் செய்து அவதூறாக சித்தரித்து சமூக வலைதளங்க ளில் பதிவிட்ட இளைஞரை போலீசார் கைது செய்தனர். கோவையைச் சேர்ந்த பெண் ஒருவர் தனியார் நிறுவனத் தில் பணியாற்றி வருகிறார். இவர் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்த புகைப்படங்களை பதிவிறக்கம் செய்த அடை யாளம் தெரியாத நபர், அதனை மார்ஃபிங் செய்து அவ தூறான கருத்துக்களுடன் சமூக வலைதளங்களில் பரப்பி யுள்ளார். இதையடுத்து அப்பெண் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். புகார் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற் கொண்டனர். அப்போது போலியான முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களை உருவாக்கி அதில் பெண்க ளின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து அவதூறு கருத்துக்களுடன் வெளியிட்ட புதுக்கோட்டை மாவட்டம் கறம் பக்குடியை சேர்ந்த விஷ்ணு (29) என்பவரை சைபர் போலீசார் கைது செய்தனர். தனியார் உணவகத்தில் பணியாற்றி வரும் விஷ்ணு முகநூல் பக்கங்களில் கிடைக்கும் பெண்களின் புகைப்படங்களை பதிவிறக்கம் செய்து இவ்வாறு போலி யான கணக்குகளில் பதிவேற்றம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து கைது செய்யப்பட்ட விஷ்ணுவை போலீசார் நீதி மன்றத்தில் நேர்நிறுத்தி சிறையில் அடைத்தனர்.
நாளை சிபிஐ மாநில மாநாடு துவக்கம்
சேலம், ஆக.13- இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு, சேலத்தில் வெள்ளியன்று (நாளை) துவங்கவுள்ளதென, அக்கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் புதனன்று சேலத்தில் செய்தியா ளர்களிடம் பேசுகையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில 26 ஆவது மாநாடு, சேலத்தில் ஆக.15 ஆம் தேதி (நாளை) துவங்கி 18 ஆம் தேதி வரை நடைபெற வுள்ளது. ஆக.16 ஆம் தேதி ‘ஜனநாயகம் வெல்லும்’ என்ற தலைப்பில் நடைபெறும் சிறப்பு மாநாட்டில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் சிறப்புரையாற்று கின்றனர். மேலும், ராமர் பற்றி கவிஞர் வைரமுத்து தனது சொந்த கருத்தை தெரிவிக்கவில்லை. ராமாயணத்தில் கம்பர் கூறியுள்ள கருத்தைத்தான் தெரிவித்தார். தமிழ்நாட்டில் ஆணவப்படுகொலையை தடுக்க தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என முதல்வரிடம் வலியுறுத்தப்பட்டது. தேர்தல் ஆணையம் தற்போது பாஜகவின் அங்கமாக செயல்படு வது வன்மையான கண்டனத்திற்குரியது, என்றார்.