tamilnadu

img

அஜித்குமார் கொலை வழக்கு: சாட்சிகளுக்கு பாதுகாப்பு அவசியம்

அஜித்குமார் கொலை வழக்கு: சாட்சிகளுக்கு பாதுகாப்பு அவசியம் 

திருப்புவனம் ஆர்ப்பாட்டத்தில் பெ.சண்முகம் வலியுறுத்தல்

திருப்புவனம், ஜூலை 7 - மடப்புரம் காளி  கோயில் ஒப்பந்த காவ லாளி அஜித்குமாரின் படுகொலைக்கு நீதி கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  சார்பில் திருப்புவனத் தில் ஜூலை 6 ஞாயிறன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  மாவட்டச் செயலாளர் ஏ.ஆர்.மோகன் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், மாநில  செயற்குழு உறுப்பினர்கள், மாவட்டச் செய லாளர்கள் மற்றும் கட்சியினர் பங்கேற்றனர். அஜித்குமார் குடும்பத்தினரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.  இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய கட்சி யின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், “மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி சுப்பிரமணி யம், கொலை செய்யும் நோக்கம் கொண்ட வர்கள் கூட இந்தளவுக்கு தாக்கமாட்டார்கள் என கடுமையாக விமர்சித்துள்ளார்” என்றார்.  “அஜித்குமார் கொலை வழக்கு முடியும்  வரை சாட்சிகளுக்கு பாதுகாப்பு மிக முக்கி யம். உயரதிகாரிகள் சம்பந்தப்பட்டிருப்ப தால் சாட்சிகளை பாதுகாப்பது மிகவும் அவசி யம். காவல்துறைக்கு எதிரான வழக்கு நடத்து வது சாதாரண காரியமல்ல” என்று வலி யுறுத்தினார்.  “இந்த வழக்கில் பல கேள்விகளுக்கு விடைகள் இல்லை. புகார் கொடுத்த நிகிதா மீது பல புகார்கள் உள்ளன. காவல்துறைக்கு அழுத்தம் கொடுத்த மேலதிகாரி யார் என்பது தெளிவாகவில்லை. வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றியதை வர வேற்கிறோம்” என்றார்.  “வழக்கில் தீர்ப்பு வரும் வரை கைது  செய்யப்பட்ட காவல்துறையினர் சிறையி லிருப்பதை உறுதிசெய்ய வேண்டும். அஜித் குமார் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். எத்தகைய தவறு செய்தா லும் சட்டப்படிதான் நடவடிக்கை எடுக்க வேண்டும். அஜித்குமார் குடும்பத்திற்கு நீதி யும் நிவாரணமும் கிடைக்கும் வரை களத்தில்  நின்று போராடுவோம்” என்று உறுதியளித் தார்.