tamilnadu

img

தொழிலாளர் விரோத மோடி அரசுக்கெதிராய்

தொழிலாளர் விரோத மோடி அரசுக்கெதிராய் 

கோவை, ஜூலை 9- ஒன்றிய பாஜக கூட்டணி அரசின் தொழிலாளர் விரோதப்போக்கை கண் டித்து, நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்தின் அறைகூவலைய டுத்து, புதனன்று கோவை, ஈரோடு,  நீலகிரி மாவட்டங்களின் பல்லாயிரக் கணக்கான தொழிலாளர்கள் வீதியில் இறங்கி மோடி அரசுக்கெதிரான போர்க் குரலை ஆவேசமாய் எழுப்பினர். கார்ப்ரேட் நலனுக்காக, தொழிலா ளர் நலச்சட்டங்களை சீரழித்தது, வேலையின்மை, விலைவாசி உயர்வு,  பொதுத்துறை பங்குகளை விற்பது  உள்ளிட்ட மக்கள் விரோத நடவடிக்கை களை ஒன்றிய மோடி தலைமையிலான அரசு தீவிரப்படுத்தி வருகிறது. கல்விக் கடன் பெற்றவர்களின் வீட்டின் வாயிற் கதவை பிடிங்கிச்செல்லும் மோடி அரசு, கார்ப்ரேட்டுகளுக்கு லட்சக்கணக்கான கோடி ரூபாய்களை தள்ளுபடி செய்கிறது. இந்நிலையிலேயே, தொழிலாளர்களின் ஒட்டு மொத்த சக்தியை திரட்டி ஜூலை 9 அகில  இந்திய வேலை நிறுத்த போராட் டத்தை நடத்த அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் அறைகூவல் விடுத் தது. தொழிலாளி வர்க்கத்தின் மனசாட்சி யாய் நின்று, மத்திய தொழிற்சங்கங்கள் விடுத்த அறைகூவலை ஏற்று புத னன்று நாடு முழுவதும் பெரும் கிளர்ச்சி கரமான போராட்டங்கள் நடைபெற்றது.  இதன்ஒருபகுதியாக கோவை, ஈரோடு, நீலகிரி மாவட்டங்களில் அகில இந்திய  வேலை நிறுத்த போராட்டம் வெற்றிகர மாக நடைபெற்றது.  கோவை மாவட்ட ஆட்சியர் அலுவ லகம் அருகே உள்ள பிஎஸ்என்எல் அலு வலகம் முன்பு நடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு, சிஐடியு மாவட்டச் செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி,  ஏஐ டியுசி மாநிலச் செயலாளர் எம்.ஆறுமு கம், எச்எம்எஸ் மாநிலத் தலைவர்  டி.எஸ்.ராஜாமணி, ஐஎன்டியுசி பாசம லர், ஏஐசிசிடியு பாலசுப்பிரமணியன் ஆகியோர் தலைமை வகித்தனர். இதில்,  மத்திய தொழிற்சங்கத்தை சேர்ந்த  ஆயிரக்கணக்கனோர் மோடி அரசுக்கு  எதிராக திரண்டு மறியலில் ஈடுபட்டு கைதாகினர். இதில், சிஐடியு மாவட்டத்  தலைவர் கே.மனோகரன் உள்ளிட்ட அனைத்து மத்திய தொழிற்சங்க தலை வர்கள், ஊழியர்கள் பங்கேற்றனர். மேட்டுப்பாளையத்தில் நடந்த மறி யல் போராட்டத்தில் சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் ரத்தினகுமார், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பி னர் கே.எஸ்.கனகராஜ், இன்ஜினியரிங் சங்க மாவட்டப் பொருளாளர் ஏ.ஜி.சுப் பிரமணியம், பிஎஸ்என்எல் தொழிற் சங்க மாநிலத் தலைவர் பாபு ராதா கிருஷ்ணன், ஏஐடியுசி மாவட்டச் செய லாளர் சிவசாமி, கட்டுமான சங்க மாநி லத் தலைவர் செல்வராஜ் மற்றும் குடிநீர்  வடிகால் வாரியம், இன்ஜினியரிங் சங் கம், மில் சங்கம், பிஎஸ்என்எல் சங்கம்,  மின்வாரிய சங்கம், பொது தொழிலாளர்  சங்கம் உள்ளிட்ட பல்வேறு சிஐடியு இணைப்பு சங்கங்களை சேர்ந்த தொழி லாளர்கள் மறியலில் பங்கேற்றனர்.  பொள்ளாச்சி பேருந்து நிலையம் எதிரில் நடைபெற்ற மறியலில் சிஐடியு குடிநீர் வடிகால் வாரிய தொழிலாளர் சங்க மண்டல பொதுச் செயலாளர் ஆர்  சரவணன், கோவை மாவட்ட அரசு போக் குவரத்து ஊழியர் சங்க தலைவர் எம். பரமசிவம் உள்ளிட்ட திரளானோர் பங் கேற்றனர். பெரியநாயக்கன்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகில் அனைத்து  சங்கங்களின் சார்பாக நடைபெற்ற மறி யலுக்கு சிஐடியு மாவட்டப் பொருளா ளர் ஆர்.வேலுசாமி தலைமை ஏற்றார்.  இதில், இணைக்கப்பட்ட சங்கங்களின் நிர்வாகிகள் சி.துரைசாமி, நவ.சிவரா ஜன். ஆர். கேசவமணி உள்ளிட்ட பலர்  கலந்து கொண்டனர். சூலூர் பழைய பேருந்து நிலையம்  முன்பிருந்து ஊர்வலமாக சென்று தொலைபேசி நிலையம் முன்பு நடை பெற்ற மறியலில் சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் கே. கோபால கிருஷ்ணன், சிபிஎம் தாலுகா செயலா ளர் சந்திரன், சிஐடியு விசைத்தறி சங்க  மாவட்ட செயலாளர் எஸ். ஜோதிபாசு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.  வேலை நிறுத்த போராட்டத்தின் எதி ரரொலியாக, கோவை உக்கடம் பேருந்து நிலையத்தில் இருந்து பாலக் காடு, மூணாறு, கொச்சின் உள்ளிட்ட கேரளாவின் பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்படும் தமிழக அரசு பேருந்து கள் இயக்கப்படவில்லை. அதே போல, கேரளாவில் இருந்து கோவைக்கு வரும் கேரள அரசு பேருந்துகளும் இயக்கப்படவில்லை. இதன்காரணமாக உக்கடம் பேருந்து நிலையம் ஆள் ஆரவாரமின்றி காணப் பட்டது. இதேபோன்று கோவை மாநக ரத்தில் சுமார் 70 சதவிகித ஆட்டோக் கள் இயக்கப்படவில்லை. இதே போன்று, அரசு பேருந்துகளும் பெரு மளவில் இயக்கப்படவில்லை. பெரும் பாலான தொழில்நிறுவனங்கள் வேலை  நிறுத்த போராட்டத்திற்கு ஆதரவு தெரி வித்து, ஆலை இயக்கத்தை நிறுத்தி னர். ஈரோடு ஈரோடு பெரியார் நகரில் சிஐடியு மாவட்டத் தலைவர் எஸ்.சுப்ரமணியன் தலைமையில், மாவட்டச் செயலாளர் எச்.ஸ்ரீராம், மாவட்ட துணைத் தலைவர்  ஆர்.ரகுராமன், ஏஐடியுசி சின்னசாமி,  தொமுச தமிழ்செல்வன், ஐஎன்டியுசி  பிரபாகரன் உள்ளிட்ட நூற்றுக்கணக்க னோர் பங்கேற்று மறியலில் ஈடுபட்டு கைதாகினர். நீலகிரி நீலகிரி மாவட்டம், குன்னூரில் நடை பெற்ற போராட்டத்திற்கு சிஐடியு மாவட்டச்செயலாளர் வினோத் தலைமையேற்றார். இதில் ஏராளமா னோர் பங்கேற்றனர். இதேபோன்று, ஊட்டியில் நடைபெற்ற மறியலுக்கு சிஐ டியு மாவட்டத்தலைவர் சங்கரலிங்கம் தலைமை வகித்தார். கூடலூரில் நடை பெற்ற மறியலுக்கு எல்பிஎப் செயலா ளர் நெடுஞ்செழியன் தலைமை வகித் தார். விவசாய சங்க மாவட்டத் தலை வர் வாசு உள்ளிட்ட திரளானோர் பங் கேற்றனர்.  பந்தலூர் பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு பி.ரமேஷ் தலைமை யேற்றார். எல்பிஎப் நிர்வாகி மாடசாமி துவக்கிவைத்தார். இதில், திரளா னோர் பங்கேற்றனர். கோத்தகிரியில்  நடைபெற்ற மறியலுக்கு சிஐடியு மகேஷ் தலைமை வகித்தார். எல்பிஎப்  ரத்தினம், ஏஐடியுசி இப்ரஹிம் உள்ளிட்ட  பலர் கலந்து கொண்டனர். எருமாடு பகு தியில் நடைபெற்ற மறியலுக்கு கே.ராஜன் தலைமை வகித்தார். சிபிஎம்  மாவட்டச் செயலாளர் வி.ஏ.பாஸ்கரன்,  விவசாயிகள் சங்கத்தின் யோகண் ணன் உள்ளிட்ட திரளனோர் பங்கேற்ற னர்.