அக்.7-9 சென்னையில் வான்வெளி, ராணுவ தொழில் மாநாடு
சென்னை: தமிழகத்தில் அடுத்த பத்து ஆண்டு களில், வான்வெளி மற்றும் ராணுவத் துறையை சேர்ந்த தொழில் நிறுவனங்களின், 75,000 கோடி ரூபாய் முதலீட்டை ஈர்க்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதற்காக தமிழக அரசின், ‘டிட்கோ’ எனப்படும் தமிழக தொழில் வளர்ச்சி நிறுவனம், சென்னையில் அக்.7 முதல் 9 ஆம் தேதி வரை, ‘ஏரோடிப்கான் 25’ அதாவது, ‘ஏரோஸ்பேஸ் அண்டு டிபென்ஸ் மீட்டிங்’ என்ற மாநாட்டை நடத்துகிறது. இந்நிகழ்ச்சியில் பாது காப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்கிறார். இதை நம் நாட்டின் ராணுவ அமைச்சகம், பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பி.சி.ஐ., ஏரோஸ்பேஸ் ஆகியவை இணைந்து நடத்துகின்றன.
