tamilnadu

தீக்கதிர் முக்கிய செய்திகள்

பள்ளிக் கல்வித்துறை நலத்  திட்டங்களுக்கு ஆதார் கட்டாயம்

சென்னை: தமிழ்நாட்டில் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்படுத்தப்படும் நலத்திட்டங்களை பெற ஆதார் எண்  கட்டாயம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த நலத் திட்டங்களின் பலன்களைப் பெற விரும்பும் பயனாளிகள் ஆதார் வைத்திருக்க வேண்டும் அல்லது ஆதார் அங்கீ காரத்துக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித்துறையின் கீழ்  விலையில்லா பாடப்புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், விலையில்லா சைக்கிள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங் கள் செயல்படுத்தப்படுகின்றன. இவற்றைப் பெறுவதற் கான பல்வேறு ஆவணங்களைக் குறிப்பிட்டு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. ஆதார் எண் கிடைக்காத பட்சத்தில் கடவுச்சீட்டு, குடும்ப  அட்டை, வாக்காளர் அடையாள அட்டை ஆகியவைகளில் ஏதாவது ஒன்றை வழங்கலாம் என்று பள்ளிக் கல்வித்துறை  தெரிவித்துள்ளது. ஆதார் அங்கீகாரம் பெறும் போது, விரல் ரேகை பதிவில் சிக்கல் ஏற்பட்டால் முகத்தை ஸ்கேன்  செய்து அங்கீகாரம் பெறலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நல்லாசிரியர் விருதுக்கு  விண்ணப்பிக்கலாம்

சென்னை: டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 20 முதல் ஆகஸ்ட் 3 வரை  இணையதளம் மூலம் பெறப்படும் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. செப்டம்பர் 5 ஆசிரியர் தின விழா வில் 386 ஆசிரியர்களுக்கு விருது வழங்கப்படும். இதில் தொடக்க நடுநிலைப் பள்ளிகளில் 171, மேல்நிலைப் பள்ளி களில் 171, மெட்ரிகுலேசன் பள்ளிகளில் 38, மற்ற பள்ளி  வகைகளில் 6 ஆசிரியர்கள் என பகிர்வு செய்யப்பட்டுள்ளது. விருது பெறும் ஆசிரியர்களுக்கு ரூ.10,000 ரொக்கப் பரிசு, ரூ.2,500 மதிப்பிலான வெள்ளிப் பதக்கம், பாராட்டுச்  சான்றிதழ் மற்றும் பயணப்படி வழங்கப்படும். விண்ணப்பிக் கும் ஆசிரியர்கள் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் கற்பித்த லில் பணிபுரிந்திருக்க வேண்டும். அரசியல் கட்சிகளுடன் தொடர்புடையவர்கள், குற்றச்சாட்டுகள் அல்லது ஒழுங்கு நட வடிக்கைகளுக்கு உட்பட்டவர்கள், கல்வியை வணிக ரீதியாக கருதுபவர்கள் ஆகியோர் விண்ணப்பிக்க தகுதி யற்றவர்கள். மாவட்ட அளவில் தேர்வு குழுக்கள் அமைக்கப்பட்டு நேர்முகத் தேர்வு நடத்தப்பட்ட பின் மாநில அளவில் இறுதித்  தேர்வு நடைபெறும். ஆகஸ்ட் 14-க்குள் மாவட்ட பரிந்து ரைகள் மாநில அளவிற்கு அனுப்பப்பட வேண்டும். தேசிய விருது பெற்ற ஆசிரியர்கள் மீண்டும் விண்ணப்பிக்க தகுதி யற்றவர்கள்.

பாமகவில் 3 எம்எல்ஏக்கள் இடைநீக்கம்

சென்னை: கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்ட தாகக் கூறி பாமகவின் மூன்று சட்டமன்ற உறுப்பினர்களான  சிவக்குமார், வெங்கடேசுவரன், சதாசிவம் மற்றும் வழக்கறி ஞர் பாலு ஆகியோரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து இடைநீக்கம் செய்வதாக பாமக தலைமை நிலையச் செயலாளர் அன்பழகன் அறிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை: சென்னை விமான நிலையத்திற்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், பாதுகாப்பு அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்த மிரட்டல் குறித்து தகவல் தெரிந்த வுடன் விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் அவசர  ஆலோசனைக் கூட்டம் நடத்தினர். அதன் பின்னர், சென்னை விமான நிலையத்தின் அனைத்து பகுதிகளி லும் தீவிர சோதனை நடத்தப்பட்டது. அந்த சோதனையில் சந்தேகத்திற்குரிய பொருள் எதுவும் கண்டுபிடிக்கப்படாத நிலையில், வெடிகுண்டு மிரட்டல் போலியானது என்பது உறுதி செய்யப்பட்டது. இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை விமான நிலையம் முழுவதும் பாதுகாப்பு அதி கரிக்கப்பட்டுள்ளது. சோதனை நடைபெறும் பகுதியில் கூடு தல் கண்காணிப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாது காப்பு அதிகரிப்பால் வெளிநாடுகளுக்கு செல்லும் விமானங் கள் புறப்படுவதில் சிறிது தாமதம் ஏற்பட்டது. மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுத்த நபர் யார் என்பது குறித்து அதி காரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்

இசை நிகழ்ச்சி ஒத்திவைப்பு

சென்னை: செங்கல்பட்டு மாவட்டம், திருவிடந்தையில் ஜூலை 26 ஆம் தேதி நடைபெறவிருந்த அனிருத்தின் மாபெ ரும் இசை நிகழ்ச்சி இடநெருக்கடி, ரசிகர்கள் பாதுகாப்பு  உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஒத்தி வைக்கப்படுவ தாகவும், புதிய தேதி, இடம் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் விழா ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

“அதுக்கு இது அர்த்தமல்ல”

சென்னை: அதி முகவை பாஜக கபளீகரம் செய்து விடும் என்று திமுக கூட்டணி கட்சிகள் விமர்சனம் செய்து வரும் நிலையில், ‘கூட்டணி ஆட்சி அமைக்க நாங்கள் ஏமாளி இல்லை எனப் பேசியதில், உள் அர்த்தமோ, உள் நோக்கமோ கிடையாது’ என எடப்பாடி பழனிசாமி என்னிடம் போனில் சொன்னார் என்று பாஜக  மாநிலத் தலைவர் நயி னார் நாகேந்திரன் தெரி வித்திருக்கிறார்.

ஒரு மீன் விலை ரூ.22 ஆயிரம்

புதுச்சேரி: புதுச்சேரி பிராந்தியம் ஏனாம் மீன வர் வலையில் சிக்கிய 1.8 கிலோ எடையுள்ள அரிய வகை புலாசா மீனை, ரத்தம் என்ற மீன் வியா பாரி ரூ.22 ஆயிரத்துக்கு ஏலத்திற்கு எடுத்தார். ஏனாம் பகுதி கோதாவரி நதி நீரில் தற்போது இந்த  பிரபலமான புலாசா  மீன் வரத்து அதிகமாக  உள்ளதாக கூறப்படுகிறது.

ஈடி ‘சூப்பர் போலீஸ் அல்ல’

சென்னை: நிலக்கரி முறைகேடு தொடர்பாக, தனியார் மின் உற்பத்தி நிறுவனத்தின் ரூ.9.01 கோடி நிரந்தர வைப்பீடு அமலாக்கத் துறையால் முடக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள், “தங்கள் கவனத்திற்கு வரும் அனைத்தையும் விசாரிக்க அமலாக்கத் துறை சூப்பர் போலீஸ் அல்ல” என்று கூறி, அம லாக்கத் துறை முடக்கம் செய்ததை ரத்து செய்து உத்தரவிட்டனர்.

மீனவர்கள் வேதனை

சென்னை: கொசஸ் தலை ஆற்றில் மீண்டும் எண்ணெய் படர்ந்து காணப்படுவதால் மீன் வளம் அழிந்து, வாழ்வா தாரம் முற்றிலும் பாதிக்கப் படுவதாக மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ள னர். இந்நிலையில், சென்னையை அடுத்த எண்ணூரில் பக்கிங்காம் கால்வாயில் மீண்டும் எண்ணெய் கழிவுகளை திறந்து விடுவதாக புகார் எழுந்துள்ளது.

கொள்கை விளக்கக் கூட்டம்

சென்னை: சேலம்  சுபாஷ் சந்திர போஸ் மை தானத்தில் திங்கட்கிழமை (ஜூலை 21) 4 மணிக்கு  தமிழக வெற்றிக் கழ கத்தின் மாநில அளவி லான கொள்கை விளக்க முதல் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளதாக தலைமைக் கழகம் அறி வித்துள்ளது.