tamilnadu

புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி வங்கக்கடலில் இன்று உருவாகிறது

புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி வங்கக்கடலில் இன்று உருவாகிறது

சென்னை, அக். 23 - வங்கக் கடலில், வெள்ளிக்கிழ மையன்று புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. முன்னதாக, இந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி அக்டோபர் 25 அன்று உருவாகும் என அறிவிக்கப்பட்ட நிலை யில், தற்போது அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகக்கூடும் என தெரிவிக்கப் பட்டுள்ளது. புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி, மண்டலமாக மாறி பெயரிடும் அளவிற்கு மாறும் என ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். இதன்காரணமாக, வெள்ளிக்கிழமை, தமிழகத்தில் ஒரு சில  இடங்கள் மற்றும் புதுச்சேரியில் இடி,  மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், ஒரு சில மாவட்டங் களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது. மீனவர்களுக்கு எச்சரிக்கை  தமிழக வட கடலோரப் பகுதிகள், தெற்கு ஆந்திர கடலோரப் பகுதி களில் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் இப்பகுதி களுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை அதிகாலை தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவானது. இது, மேற்கு-வடமேற்கு திசையில் நகா்ந்து, புதன்கிழமை பிற்பகல் காற்றழுத்தத் தாழ்வு மண்டல மாக வலுப்பெறக் கூடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அது மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து  குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவிழந்தது. மேலும், மேற்கு-வடமேற்கு நோக்கி தொடர்ந்து நகர்ந்து  தெற்கு உள் கர்நாடகத்தில் மேலும் வலுவிழக்கும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இயல்பை விட 85 சதவிகிதம் கூடுதல் மழை தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவ மழை இயல்பை விட 85 சதவிகிதம் கூடுதலாக பெய்துள்ளது என வானிலை  மையம் தெரிவித்துள்ளது. அக்டோபர் 1 முதல் அக்டோபர் 22 வரையிலான இயல்பான பருவமழை 115.1 மி.மீ. என்ற நிலையில், இதுவரை 212.9 மி.மீ. மழை பெய்துள்ளது. சென்னையில் வட கிழக்கு பருவமழை இயல்பை விட  74 சதவிகிதம் கூடுதலாக பெய்துள் ளது எனவும் வானிலை மையம் தெரி வித்துள்ளது.