tamilnadu

img

கோவில் நிதியில் கல்லூரி கட்டலாம்

கோவில் நிதியில் கல்லூரி கட்டலாம்!

உச்சநீதிமன்றம் முக்கியத் தீர்ப்பு

புதுதில்லி, ஆக. 29 - கோவில் நிதியை கல்லூரி கட்டு வதற்குப் பயன்படுத்தலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதற்கு எதிரான வழக்கையும் அதிரடியாக தள்ளுபடி செய்துள்ளது. சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வ ரர் கோவில் சார்பில், கோவில் நிலத்தில் கல்லூரி கட்டடம் கட்டுவதற்கான அறி விப்பாணையை இந்து சமய அற நிலையத் துறை ஆணையர் வெளி யிட்டிருந்தார். ஆனால், கோவில் நிலத்தில் கல்லூரி அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து டி.ஆர். ரமேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத் தில் வழக்கு தொடர்ந்தார். கல்லூரி  கட்டடம் அமைப்பதற்கான அறிவிப்பா ணையை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரியிருந்தார். வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், இந்து சமய அற நிலையத் துறை ஆணையரின் அறி விப்பாணையை ரத்து செய்ய மறுத்து விடவே, கல்லூரி கட்டுவதற்கான முதற் கட்டப் பணிகள் தொடங்கப் பட்டன. ஆனால், சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து ரமேஷ் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.  இந்த மனு நீதிபதி விக்ரம் நாத்  தலைமையிலான அமர்வில் வெள்ளிக் கிழமையன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கைத் தொடுப்பதற்கு உங்களுக்கு என்ன முகாந்திரம் உள்ளது என்று டி.ஆர். ரமேஷிடம் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்து பேசிய ரமேஷ், தற்போது கல்லூரி கட்டுவதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள இடமானது கொளத்தூர் சோம்நாத் ஆலயத்தின் இடமாகும். மேலும், கோவில் நிதியை கல்லூரிக்காக பயன்படுத்துகின்றனர். எனவே, கல்லூரி கட்டடம் கட்டும் அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்றார். இந்து சமய அறநிலையத்துறை தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சண்முகசுந்தரம், சோம்நாத் ஆல யத்தின் இடத்தில் கட்டடத்திற்கு அனு மதி வழங்கப்பட்டிருந்தாலும், அந்த இடத்திற்கான வாடகையாக 3 லட்சத்து 19 ஆயிரம் ரூபாயை இந்து சமய அறநிலையத் துறையானது கோவி லுக்கு வழங்கி வருகிறது. சம்மந்தப் பட்ட இடத்தை வாடகை இல்லாமல் இலவசமாக பயன்படுத்தவில்லை. கபாலீஸ்வரர் திருக்கோவிலின் சார்பில் தான் கல்லூரி அமைக்கப்பட உள்ளது. கல்விக்காகத்தான் இந்த இடத்தை பயன்படுத்துகிறோம் என்றார்.  அதற்கு நீதிபதிகள், மாணவர் களின் எதிர்காலத்துக்காக கல்லூ ரிக்கான கட்டமைப்பை தான் இந்து சமய அறநிலையத் துறை ஏற்படுத்து கிறது. கல்விக்காகத்தான் கோவில் நிதியைப் பயன்படுத்துகிறார்கள். எனவே, கல்விக்காக கட்டடம் அமைப்பதோ அல்லது நிதியை பயன்படுத்துவதிலோ என்ன தவறு இருக்கிறது என்று கேள்வி எழுப்பினர். மேலும், கபாலீஸ்வரர் கோவில் நிதியை கல்விக்குப் பயன்படுத்து வதில் தவறில்லை என்று கூறி  தமிழக அரசுக்கு எதிரான மனுவை தள்ளு படி செய்து உத்தரவிட்டனர்.