tamilnadu

வாய்ப்பு வாசல்

தில்லி காவல்துறையில் 7,565 பணியிடங்கள்

ஒன்றிய அரசின் கீழ் உள்ள புதுதில்லி காவல்துறையில் கான்ஸ்டபிள் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கை வெளியாகியுள்ளது. மொத்தம் 7 ஆயிரத்து 565 பணியிடங்களை நிரப்பப் போகிறார்கள். இதில் பெண்களுக்கு 2 ஆயிரத்து 496 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. கல்வித்தகுதி - பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருத்தல் அவசியமா கும். ஆண்கள் இலகுரக வாகன ஓட்டுநருக்கான உரிமம் பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு - ஜூலை 01, 2025 ஆம் தேதியன்று 18 முதல் 25 வயதுக்குள் இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., இதர பிற்படுத்தப்பட்டோர் ஆகிய பிரிவினருக்கு அரசு விதிமுறைகளின்படி தளர்ச்சி உண்டு.  உடற்தகுதி - ஆண்கள் குறைந்தபட்சமாக 170 செ.மீ. உயரமும், பெண்கள் 157 செ.மீ. உயரமும் கொண்டிருக்க வேண்டும். ஆண்களுக்கு மட்டும் மார்பளவானது சாதாரண நிலையில் 81 செ.மீ. அகலமும், 5 செ.மீ. விரிவடையக்கூடியதாகவும் இருக்க வேண்டும்.  உடற்திறன் தகுதி - இந்தத் தகுதித் தேர்வில் அவசியம் தேர்ச்சி பெற வேண்டும். 1.6 கி.மீ. தொலைவை ஆண்கள் 6 நிமிடங்களிலும், பெண்கள் 8 நிமிடங்களிலும் ஓடிக்கடக்க வேண்டும். அதோடு உயரம் தாண்டுதல், நீளந்தாண்டுதல் ஆகியவற்றிலும் தேர்ச்சி பெற வேண்டும். எழுத்துத் தேர்வு - டிசம்பர் 2025ல் எழுத்துத் தேர்வு நடைபெறும். தமிழ்நாட்டில் சென்னை, கோயம்புத்தூர், மதுரை, சேலம், வேலூர், தூத்துக்குடி, கரூர் ஆகிய இடங்களில் தேர்வு மையங்கள் இருக்கும். எழுத்துத்  தேர்வுக்கான பாடத்திட்டம் அறிவிக்கையில் உள்ளது. இந்த விபரம் உள்ளிட்ட கூடுதல் தகவல்களுக்கு www.ssc.gov.inஎன்ற இணையதளத்தைப் பார்வையிடலாம். விண்ணப்பிக்கக் கடைசித் தேதி அக்டோபர் 21, 2025 ஆகும்.

நெய்வேலி பழுப்பு நிலக்கரிக் கழகம்(NLC)(1,101)

பொதுத்துறை நிறுவனமாக நெய்வேலி பழுப்பி நிலக்கரிக் கழகத்தில்  ஐடிஐ மற்றும் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கான வாய்ப்பு வந்துள்ளது. மொத்தம் 1101 இடங்கள் உள்ளன. ஓராண்டு காலத்திற்கான இந்தப் பயிற்சிக்கு ஐடிஐ மற்றும் பட்டப்படிப்பில் பெற்றுள்ள மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். பணியிட வாரியான காலியிடங்கள், பட்டப்படிப்பு தகுதிக்கான பாடப்பிரிவுகள் ஆகியவை அறிவிக்கையில் தரப்பட்டுள்ளன. குறைந்தபட்சம் 18 வயது நிறைவு செய்திருக்க வேண்டும். இது குறித்த கூடுதல் விபரங்களுக்கு www.nicindia.inஎன்ற இணையதளத்தை அணுகலாம். விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி அக்டோபர் 21, 2025 ஆகும்.

பாதுகாப்பு ஆய்வு மற்றும்  மேம்பாட்டுக்கழகம்(DRDO)(195)

டி.ஆர்.டி.ஓ.க்குக் கீழ் இயங்கும் அப்துல் கலாம் ஏவுகணை ஆய்வு  மையத்தில் தொழில் பழகுநர்களுக்கான 195 இடங்களை நிரப்புகிறார்கள். 2021 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஐடிஐ, பட்டயம் மற்றும் பட்டப்ப டிப்பு முடித்தவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஓராண்டு காலத்திற்கு இந்தப் பயிற்சி வழங்கப்படும். டி.ஆர்.டி.ஓ.  விதிகளின்படி பயிற்சிக்காலத்தில் உதவித்தொகை தரப்படும். பி.இ. மற்றும் பட்டயப்படிப்பு படித்தவர்கள் www.nats.education.gov.inஎன்ற இணையதளம் வாயிலாகவும், ஐடிஐ முடித்தவர்கள் www.apprenticeshipindia.gov.inஎன்ற இணைய தளம் மூலமும் பதிவு செய்து கொள்ளலாம். பின்னர் www.drdo.gov.inஎன்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். 

தொழில் பழகுநர் வாய்ப்பு

ஐடிஐ படித்து முடித்தவர்களுக்கு பல்வேறு அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் தற்போது தொழில் பழகுநர்(Apprentice) பயிற்சி பெறும் வாய்ப்புகள் வந்துள்ளன. பல்வேறு நிறுவனங்களில் பணியிடங்களை நிரப்புகையில் தொழில் பழகுநர் பயிற்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு வருகிறது.

ரயில்வே (1149)

ஒன்றிய அரசின் கீழ் இயங்கும் கிழக்கு மத்திய ரயில்வேயில் ஐடிஐ படித்தவர்களுக்கான தொழில் பழகுநர் பயிற்சி வழங்கப்படுகிறது. மொத்தம் 1,149 இடங்கள் உள்ளன. ஓராண்டு காலத்திற்கு வழங்கப்படும் இந்தப் பயிற்சிக்காலத்தில் ரயில்வே விதிமுறைகளின்படி உதவித்தொகை வழங்கப்படும். ஐடிஐ படிப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ச்சி இருக்கும். விண்ணப்பத்தைப் பதிய விரும்புபவர்கள்  www.ecr.indianrailways.gov.inஎன்ற இணைய தளம் வாயிலாகப் பதியலாம்.  விண்ணப்பத்தை நிரப்புவதற்குக் கடைசித்தேதி அக்டோபர் 25, 2025 ஆகும்.

தபால் வங்கியில் வேலை

ஏற்கனவே கிராம தபால்ஊழியராகப்(GDS) பணியாற்றிக் கொண்டிருப்பவர்களுக்கு தபால் வங்கியில் நிர்வாகப் பிரிவில் பணியாற்றும் வாய்ப்பு வந்துள்ளது. பட்டப்படிப்பு நிறைவு செய்திருக்க வேண்டும். நாடு முழுவதும் மொத்தம் 348 பணியிடங்களை நிரப்பப் போகிறார்கள். இது குறித்த விபரங்களை www.ippbonline.comஎன்ற இணையதளத்தில் இருந்து பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பிக்கக் கடைசித் தேதி அக்டோபர் 29, 2025 ஆகும்.