tamilnadu

ஆவடி அருகே வீட்டில் வைத்திருந்த பட்டாசுகள் வெடித்து 4 பேர் பலி

ஆவடி அருகே வீட்டில் வைத்திருந்த பட்டாசுகள் வெடித்து 4 பேர் பலி

சென்னை,அக்,19- திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அருகே உள்ள பட்டாபிராம் பகுதியில் ஒரு வீட்டில் விற்பனைக்காக  பட்டாசுகள் வைக்கப்பட்டிருந்தன.  இந்நிலையில் ஞாயிறன்று இந்த வீட்டில் இருந்த  பட்டாசுகள் வெடித்து நிகழ்ந்த விபத்தில்  யாசின், சுனில் உள்ளிட்ட 4 பேர் உடல் கருகி பலியாகினர். விபத்தில் வீடு முழுவதும் சேதமான நிலையில், ஆவடி தீயணைப்பு வீரர்கள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.