tamilnadu

img

வாக்கு முறைகேட்டை கண்டித்து “இந்தியா” கூட்டணி மாபெரும் பேரணி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் 300 பேர் கைது

வாக்கு முறைகேட்டை கண்டித்து “இந்தியா” கூட்டணி  மாபெரும் பேரணி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் 300 பேர் கைது

புதுதில்லி, ஆக. 11 - வாக்காளர் நீக்கம் மற்றும் சேர்ப்பு விவகாரம் உள்ளிட்ட “வாக்கு முறை கேடுகள்” மூலமாகவே தேர்தல் ஆணை யத்தின் உதவியோடு பாஜக மத்தியிலும், மாநிலங்களிலும் ஆட்சியை கைப்பற்றி வருகிறது என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடந்த வாரம் வியாழக்கிழமை அன்று ஆதாரத்துடன் குற்றம் சாட்டினார்.  ராகுல் காந்தியின் இந்த குற்றச்சாட்டு உண்மை என கர்நாடகா மற்றும் பீகார் மாநிலங்களில் ஊடகங்களும் ஆய்வு மூலம் ஆதாரங்களை வெளியிட்டுள்ளன.  போராட்டம் இந்நிலையில், வாக்காளர் பட்டியல் முறைகேடு குறித்து விசாரணை நடத்த வலியுறுத்தியும், பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், தில்லியில் திங்க ளன்று நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து இந்திய தலைமை தேர்தல் ஆணை யத்தின் தலைமை அலுவலகம் நோக்கி  பேரணியாக போராட்டம் நடத்தப்போவதாக எதிர்க்கட்சிகளின் “இந்தியா” கூட்டணி அறிவிப்பு வெளியிட்டது.  300 எம்.பி-க்கள் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து திங்களன்று காலை காங்கிரஸ், திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரிக் கட்சிகள், சமாஜ்வாதி, சிவ சேனா (உத்தவ்), திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் (சரத்), தேசிய மாநாட்டுக் கட்சி உள்ளிட்ட “இந்தியா” கூட்டணியின் 25 கட்சிகளைச் சேர்ந்த 300 எம்.பி-க்கள் மக்களவை எதிர்க்கட்சித் தலை வர் ராகுல் காந்தி தலைமையில் வாக்காளர் பட்டியல் முறைகேடு குறித்த பதாகை மற்றும் முழக்கங்களுடன் நாடாளுமன்ற வளா கத்தின் மகர் த்வாரிலிருந்து பேரணியை தொடங்கினர். தடுப்புகள் தகர்ப்பு தலைமை தேர்தல் ஆணைய அலுவல கம் உள்ள நிர்வாசன் சதன் அருகே பேரணி வந்த போது மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பி-க்கள் ராதாகிருஷ்ணன், ஏ.ஏ.ரஹீம், சிவதாசன், சு.வெங்கடேசன், ஆர்.சச்சி தானந்தம், திமுக நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ், திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர் மஹுவா மொய்த்ரா உள்ளிட்ட “இந்தியா” கூட்டணி எம்.பி-க்களை தடுப்புக்கள் மூலம் தடுத்து நிறுத்தியது தில்லி காவல்துறை. எனினும் எம்.பி-க்கள் தடுப்புகள் மீது ஏறி தேர்தல் ஆணையத்திற்கு எதிராக முழக்கங் களை எழுப்பினர். காங்கிரஸ் எம்.பி.ஜோதிமணி, மஹுவா மொய்த்ரா உள்ளிட்ட பெண் எம்.பி-க்கள் தடுப்புகள் மீது ஏறி ஆவேச முழக்கம் எழுப்பினர்.  கைது தொடர்ந்து “இந்தியா” கூட்டணி எம்.பி-க்களை வலுக்கட்டாயமாக கைது செய்து 10-க்கும் மேற்பட்ட பேருந்துகள் மூலம்  நாடாளுமன்ற தெரு காவல் காவல்துறை யினர் அழைத்துச் சென்றனர். 1 மணி நேரத்திற்குப் பிறகு அனைத்து எம்.பி-க்களும் விடுவிக்கப்பட்டனர். தேர்தல் முறைகேட்டை கண்டித்து அஹிம்சை வழியில் போராடிய “இந்தியா” கூட்டணி எம்.பி-க்களை வலுக்கட்டாயமாக கைது செய்த மோடி அரசின் நடவடிக்கைக்கு  நாடு முழுவதும் கண்டனங்கள் குவிந்து வருகின்றன.