புதுக்கோட்டையில் தீக்கதிருக்கு 255 சந்தாக்கள் அளிப்பு!
புதுக்கோட்டை, ஜூலை 25 - தீக்கதிர் நாளிதழுக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக்கோட்டை மாவட்டக்குழு சார்பில் 255 தீக்கதிர் சந்தாக்கள் வழங்கப்பட்டன. இதற்கான பேரவைக் கூட்டம் வெள்ளிக்கிழமையன்று கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் எஸ். சங்கர் தலைமை வகித்தார். மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், மத்தியக் குழு உறுப்பினர் கே.பாலபாரதி ஆகியோர் சிறப்புரையாற்றினர். அவர்களிடம் 190 ஆண்டு சந்தா, 65 ஆறு மாதச் சந்தாக் களுக்கான தொகை ரூ. 5 லட்சத்து 15 ஆயிரம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், தீக்கதிர் திருச்சி பதிப்பு மேலாளர் ஜே. ஜெயபால், கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ். கவிவர்மன், கே. சண்முகம், கே. நாகராஜன், த. அன்பழகன், துரை. நாராயணன், எஸ். ஜனார்த்தனன், கி. ஜெயபாலன், டி. சலோமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.