வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை செம்பனார்கோவிலில் 2 ஆயிரம் மணல் மூட்டைகள் தயார்
மயிலாடுதுறை, அக்.15 - வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் விதமாக மயி லாடுதுறை நெடுஞ்சாலைத் துறை சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரு கிறது. மழை மற்றும் வெள்ளப் பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்க மாவட்டம் முழுவதும் நெடுஞ்சாலைத்துறை பொறியாளர்கள் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் செம்பனார்கோவில் பகுதிகளில் 2 இடங்களில் 2000 மணல் மூட்டைகள் தயார் நிலையில் வைக்கப் பட்டுள்ளன. இப்பணிகளை உதவி கோட்டப் பொறியாளர் ஜெக நாதன் மற்றும் இளநிலைப் பொறியாளர் சந்தோஷ்குமார் ஆகி யோர் மேற்பார்வை செய்கின்றனர். மழை மற்றும் பலத்த காற்றால் மரம் விழும் அபாயத்தைத் தடுக்கும் வகையில் சாலை ஓரங்களில் காய்ந்த மரக்கிளை களை அகற்றும் பணிகளை நெடுஞ்சாலைத் துறை ஊழியர்கள் தீவிரமாக செய்து வருகின்றனர். பலத்த காற்றில் மரங்கள் விழுந் தால் உடனடியாக அதை அப்புறப்படுத்தி சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள மரம் அறுக்கும் இயந்திரங்கள் தாயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. அவசர நிலைகளில் பயன்படுத்துவதற் காக ஜேசிபி இயந்திரங்கள், மீட்பு மற்றும் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள பாதுகாப்பு உபகரணங்கள் தயாராக வைக்கப் பட்டுள்ளன. மழை காலத்தில் திடீர் வெள்ளம், சாலை சேதம் மற்றும் போக்குவரத்து தடைகள் போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் என நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். செம்ப னார்கோவில் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து மரக் கன்றுகள் நட்டு பராமரித்து வருவதால் மழை, வெள்ளத்தால் ஏற்படும் மண்சரிவு, உடைப்புகள் ஏற்படாமல் தடுக்கப்படும்.